முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / EXCLUSIVE : விஜய் பிறந்தநாளில் வெளியாகும் லியோ அப்டேட் ? - தயாரிப்பாளர் லலித் குமார் சொன்ன தகவல்

EXCLUSIVE : விஜய் பிறந்தநாளில் வெளியாகும் லியோ அப்டேட் ? - தயாரிப்பாளர் லலித் குமார் சொன்ன தகவல்

லியோ படத்தின் அப்டேட்

லியோ படத்தின் அப்டேட்

Leo Update : விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய லியோ படத்தின் தயாரிப்பாளர், லியோ படத்தின் அப்டேட் நடிகர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் நடிக்கும் லியோ படத்திற்கான அப்டேட் நடிகர் விஜய் பிறந்தநாளான ஜூன் மாதம் 22ஆம் தேதி வெளியாகும்  என படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்துள்ளார்.

பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்துவரும் தமிழ் நாட்டைச் சார்ந்த கலைஞர்களை, சாதனையாளர்களை மகுடம் விருதுகள் மூலம் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளுக்கு, சிறந்த சினிமா கலைஞர்களுக்கு மகுடம் சூடி கொண்டாடும் மகுடம் விருதுகள் 2022, நியூஸ் 18 குழுமத்தின் சார்பாக இன்று சென்னையில் வழங்கப்பட்டது. இந்த விழாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இந்த விருது பரிந்துரையில் 2022ல் சிறந்த ஓடிடி திரைப்பட விருது விக்ரம் நடிப்பில் வெளியான மகான் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதை தயாரிப்பாளர் லலித் குமார், பெற்றுக்கொண்டார். அப்போது பேசிய லலித்குமார், “லியோ படத்தின் அப்டேட் நடிகர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி கொடுக்கப்படும்” என தெரிவித்தார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay