முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அண்ணன் யாரு... உலக அளவில் 3, இந்திய அளவில் 1 - இன்ஸ்டாவிலும் மாஸ் காட்டிய விஜய்!

அண்ணன் யாரு... உலக அளவில் 3, இந்திய அளவில் 1 - இன்ஸ்டாவிலும் மாஸ் காட்டிய விஜய்!

விஜய்

விஜய்

நடிகர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கம் துவங்கிய 99 நிமிடங்களில் 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றிருக்கிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் நிறைவடைந்தது. இந்த நிலையில் விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்களில் துவங்கவிருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கப்பட்டிருக்கிறது. துவங்கிய சில மணி நேரங்களிலேயே 2 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறார். இந்தப் பக்கத்தினை அவரது அட்மின் நிர்வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய்யின் ட்விட்டர் பக்கத்தையும் அவரது மேனேஜர் ஜெகதீஷ் நிர்வகித்து வருகிறார். இதனை வாரிசு இசை வெளியீட்டு விழாவிலேயே நடிகர் விஜய் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கம் துவங்கிய 99 நிமிடங்களில் 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றிருக்கிறார். பிடிஎஸ் என்ற இசைக் கலைஞர் 43 நிமிடத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்று முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 59 நிமிடங்களில் 1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்று 2வது இடத்தில் இருக்கிறார். தற்போது உலக அளவில் மூன்றாவது இடத்திலும் இந்திய அளவில் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

First published:

Tags: Actor Thalapathy Vijay