முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''முஸ்லீம் பிரச்னையை பேசுனேன்.. ஆனால்..'' - வைரலாகும் வெங்கட் பிரபுவின் பேச்சு

''முஸ்லீம் பிரச்னையை பேசுனேன்.. ஆனால்..'' - வைரலாகும் வெங்கட் பிரபுவின் பேச்சு

சிம்பு - வெங்கட் பிரபு

சிம்பு - வெங்கட் பிரபு

மாநாடு படத்தில் முஸ்லீம் பிரச்னையை பேசியிருப்பதாக இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்த தகவல் வைரலாகிவருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கஸ்டடி படத்துக்கு பிறகு விஜய் நடிப்பில் தளபதி 68 படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு தனது படங்கள் குறித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், ''நான் சீரியஸா படம் எடுத்தா ஓட மாட்டேங்குது. வெற்றிமாறன் சார் மாதிரி படம் எடுக்கணும்னு நினைச்சா ஸ்லோவா இருக்குனு சொல்றாங்க. ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொன்னு எதிர்பார்க்கிறாங்க. என் கிட்ட இருந்து எண்டடெயினர் தான் எதிர்பார்க்கிறாங்க. மங்காத்தா காமெடி படமா இல்ல. அது ஒரு ஹெயிஸ்ட் ஜானர் படம். அது சீரியஸான படம் தான். அதில் நான் எண்டர்டெயின்மென்ட் சேர்த்துட்டேன்.

மாநாடு படத்துல இந்து முஸ்லீம் பிரச்னையை பேசுனேன். அதுல அப்துல் காலிக் அப்படிங்கிற ஒருத்தர் டைம் லூப்ல மாட்டிக்கிறானு சொல்றோம். அத எண்டர்டெயினிங்கா சொன்னோம். அந்தப் படத்துல எஸ்.ஜே.சூர்யாவின் கேரக்டர் அவரோட இயலாமையை வெளிப்படுத்துறது உங்களுக்கு காமெடியா தெரியுது. அது கதையோடு வரும்போது அது பிரச்னையில்ல

இதையும் படிக்க |அவருக்காக எழுதிய கதை - நடிக்க மறுத்த விக்ரம்? - பிரபல இயக்குநருடைய குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

இப்போ கஸ்டடினு ஒரு படம் பண்ணேன். முதல்முறையா தெலுங்குக்கு பண்றோம். வேற மாதிரி படம் பண்ணலாம்னு நினைச்சேன். சீரியஸான படமா அந்தப் படம் பண்ணேன். தெலுங்குல எமோஷன்ஸ் கேட்கிறாங்க. எல்லாமே பாடம் தான். சினிமாவை பொறுத்தவரை எனக்கு எல்லாமே தெரியும் என யாராலும் சொல்ல முடியாது. கடைசி வரை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்'' என்று பேசியிருந்தார்.

top videos

    இதனையடுத்து கஸ்டடி படத்தில் எமோஷனல் காட்சிகள் வேண்டும் என தயாரிப்பாளர் அழுத்தம் கொடுத்ததை மறைமுகமாக சொல்கிறாரோ எனவும் கஸ்டடி படத்தின் தோல்விக்கு இதுதான் காரணமா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    First published:

    Tags: Simbu, Venkat Prabhu