தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். 40 - வயதை கடந்திருந்தாலும் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்த சினிமா உலகை சுற்றி வந்துள்ளார். இவர் விஜயுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா, மாதவனுடன் ரன், விஷாலுடன் சண்டகோழி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் இப்போது தமிழிலும் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.
தமிழில் வெளியாகி வெற்றியடைந்த இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த சசிகாந்த். இவர் தற்போது இயக்குனராக மாறியுள்ளார். அவர் இயக்கும் முதல் திரைப்படம் விளையாட்டு திறன் மற்றும் தோழமை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி உருவாக உள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிகர்கள் மாதவன் சித்தார்த் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இதற்கான முதல் கட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது.
Also read... எப்படி இருக்கிறது கஸ்டடி படம்? ட்விட்டர் விமர்சனம்!
Happy to welcome on board #theTEST🏏 the super talented #MeeraJasmine ! ✨@ActorMadhavan #Nayanthara #Siddharth @sash041075 @chakdyn @onlynikil pic.twitter.com/cmNLcbojPG
— Y Not Studios (@StudiosYNot) May 9, 2023
இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டெஸ்ட்' திரைப்படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். வருடங்களுக்கு முன் மாதவனுடன் ரன் படத்தில் நடித்த மீராவுக்கு தற்போது மீண்டும் மாதவனுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nayanthara