நடன இயக்குநர் சைதன்யா தெலுங்கில் தீ என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இவர் நேற்று ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்கொலை செய்துகொள்வதற்கு முன் சைன்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதில் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என வேதனை தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிக்க | அஜித்தின் 'விடாமுயற்சி' படக் கதை இதுவா? போஸ்டரில் இதை கவனிச்சீங்களா? டீகோட் செய்யும் ரசிகர்கள்
அந்த வீடியோவில் எனது அம்மா, அப்பா என்னை நன்றாக பார்த்துக்கொண்டார்கள். என் நண்பர்களிடம் நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். பண விஷயத்தில் என் மேல் இருந்த நன்மதிப்பை இழந்துவிட்டேன். கடன் வாங்கியிருந்தால் சரியாக செலுத்த வேண்டும்.
ஆனால் அது என்னால் முடியவில்லை. நான் நெல்லூரில் இருக்கிறேன். இது தான் என் கடைசி நாள். கடனால் ஏற்பட்ட பிரச்னைகளை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று பேசியிருக்கிறார். அவரது மறைவக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Commit suicide