மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, 24 மணிநேரத்தில், நாடு முழுவதும் 3 ஆயிரத்து 16 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது நேற்றுடன் அதாவது புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் 40 சதவிகிதம் அதிகமாகும். தற்போது ஒட்டுமொத்தமாக 13 ஆயிரத்து 509 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 14 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 8 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதே போன்று மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிக அளவில் பதிவாகி உள்ளது. நாடு முழுவதும் தினசரி கொரோனா பரவும் வீதம் 2 புள்ளி 73 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அச்சமடையாமல், எச்சரிக்கையுடன் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவரும் நடிகை மஹி விஜ் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பேசும் அவர் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். தனக்கு காய்ச்சல் வந்ததும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டதாகவும் பலரும் அவரை தடுத்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
View this post on Instagram
மேலும் தனக்கு கடுமையான உடல் வலி இருப்பதாகவும் கடந்த முறையை இந்த கொரோனா அலை மிக மோசமாக இருப்பதாகவும் எல்லோரும் கவனமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.