முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'நமது சமூக வரலாறும் அடங்கியிருக்கிறது' - ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்துக்கு முதல்வர் வாழ்த்து

'நமது சமூக வரலாறும் அடங்கியிருக்கிறது' - ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்துக்கு முதல்வர் வாழ்த்து

ஏவிஎம் மியூசியத்தை திறந்துவைக்கும் மு.க.ஸ்டாலின்

ஏவிஎம் மியூசியத்தை திறந்துவைக்கும் மு.க.ஸ்டாலின்

ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை திறந்துவைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தமிழ் சினிமாவில் முக்கிய பங்காற்றியிருக்கிறது. கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக பல மைல்ஸ்டோன் படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மேலும் ஏவிஎம் ஸ்டுடியோவில் ஏராளமான படங்களின் படப்பிடிப்பும் நடத்தப்பட்டிருக்கின்றன.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஏவிஎம் நிறுவனத்தின் சார்பில் ஏராளமான டிவி சீரியல்களும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அருண் விஜய் நடிப்பில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸும் ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்தில் உபயோகத்திலிருந்த பழைய திரைப்பட தயாரிப்பு கருவிகள், பாரம்பரியமான கார்கள், இரு சக்கர வாகனங்கள் கொண்ட ஹெரிடேஜ் மியூசியத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இதையும் படிக்க |  இப்போதும் உடல் நடுங்குகிறது.... கார் விபத்தில் சிக்கிய பொன்னியின் செல்வன் பாடகி ரக்ஷிதா- அவங்களுக்கு என்ன ஆச்சு..

இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டின் திரைவரலாறு என்பது சமூக வரலாற்றோடும் அரசியல் வரலாற்றோடும் பின்னிப் பிணைந்தது. அதில் ஏவிஎம் புரொடக்சன்ஸின் பங்கு தலையாயது; தவிர்க்க முடியாதது. இந்தியத் துணைக் கண்டத்தில் சினிமாவின் பரிணாம வளர்ச்சியை ஏவிஎம் இல்லாமல் எழுதிவிட முடியாது.

top videos

    நீண்ட திரை வரலாற்றை, தொழில்நுட்ப வளர்ச்சிகளை எடுத்துக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தில் நமது சமூக வரலாறும் அடங்கியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: CM MK Stalin