முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / “வைகை கரை காற்றே நில்லு..!” - காதலை கண்களில் கசிய வைத்த டி.ஆர்..!

“வைகை கரை காற்றே நில்லு..!” - காதலை கண்களில் கசிய வைத்த டி.ஆர்..!

டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர்

T. Rajendar Birthday Special | நடிப்பு, இசை, பாடல், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என தமிழ் சினிமாவின் சகல துறைகளிலும் உச்சம் தொட்டவர் டி.ராஜேந்தர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

முகம் முழுக்க மண்டிக்கிடக்கும் தாடி, பொசு பொசுவென சிலுப்பிக் கொள்ளும் முடி என ஹீரோவுக்கென எந்தப் பெரிய அடையாளமும் இல்லாமல் வந்து ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் வெற்றி பெற்றவர் டி,ராஜேந்தர். இவரின் முதல் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புது தடம் பதித்த ‘ஒரு தலை ராகம்’. அசல் கல்லூரியை, மாணவர்களை, அவர்களின் இயல்பான நடை, உடை, பாவனைகளுடன் உலவவிட்டது இந்த ஒருதலை ராகம். காதலும், கண்ணீரும் சம பங்கு கலந்த இத்திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் மெகா வெற்றியை பெற்றது.

’ரயில் பயணங்களில்’, ’உயிருள்ள வரை உஷா’, ’மைதிலி என்னை காதலி’ போன்ற டி.ஆரின் படைப்புகள் தமிழ் சினிமாவின் காதல் காவியங்களாகின. ’வைகை கரை காற்றே நில்லு வஞ்சி தனை பார்த்தால் சொல்லு’ ….. ’இது குழந்தை பாடும் தாலாட்டு’ … ’கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே’ என இவர் வடித்த வரிகள் காதலை கண்களில் கசிய செய்தது. கூடவே அவரது அலாதியான அடுக்குமொழி அளவற்ற ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.

தங்கையின் பாசத்தை மையமாக வைத்து இவர் இயக்கிய ’தங்கைகோர் கீதம்’..... குடிப்பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை சொன்ன ‘ உறவை காத்த கிளி’ ... தாய் பாசத்தை சொன்ன ‘ஒரு தாயின் சபத’ என தொடர்ந்து இவர் இயக்கத்தில் வந்த திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டன.

இதையும் படிங்க: 31 ஆண்டுகளுக்குப் பிறகு... மீண்டும் இணைந்த பாரதிராஜா - இளையராஜா கூட்டணி...!

 டி.ராஜேந்தர் எழுதிய பல பாடல்கள் கண்ணதாசனையும் அவரிடத்தில் காதல் கொள்ள செய்தது. ’இது குழந்தை பாடும் தாலாட்டு இரவு நேர பூபாளம்’, ’விழிகள் மேடையாம்’, ’ தோள் மீது தாலாட்ட’, ‘தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி’, ‘ நானும் உந்தன் சிறகை நாடி வந்த பறவை’. நூலும் இல்லை வானும் இல்லை’ என சொல்லிக் கொண்டே போகலாம் இவர் எழுதிய காலம் மறவா பல பாடல்களை.

top videos

    முடியை சிலுப்பி கொண்டு இவர் பேசும் ரைமிங் வசனங்களுக்கென்று டி.ஆர் ஆர்மியே உருவானது. ஆம்.. இப்போது விஜய் அஜித் பேசும் பஞ்ச் வசனங்களுக்கு பிதாமகனே டி.ஆர்தான் என சொன்னால் அது மிகையில்லை.

    First published:

    Tags: Simbu, T Rajendar