முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிப்பு அரக்கன் விக்ரம் பிறந்த நாள் இன்று..!

நடிப்பு அரக்கன் விக்ரம் பிறந்த நாள் இன்று..!

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரமின் பிறந்த நாளான இன்று அவர் பற்றி அறியாத சில சுவாரசிய தகவல்கள்

  • Last Updated :
  • Chennai, India

தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு என எந்த தியாகத்தையும் செய்யக்கூடிய நடிகர் என்றவுடன் ரசிகர்களின் நினைவுக்கு வரும் பெயர்களில் முக்கியமான ஒன்று விக்ரம்.

சினிமாவில் வெற்றிக்காக ஏறத்தாழ 15 ஆண்டுகள் காத்திருந்த விக்ரம் இந்த இடைவெளியில் கலாட்டா குடும்பம், சிறகுகள் உள்ளிட்ட ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் தோன்றியுள்ளார் என்பது வெகு சில ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த தகவல்.

இதேபோல வெற்றிக்காக காத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் டப்பிங் கலைஞராக தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடிகர் விக்ரம் டப்பிங் பேசியது இப்பொழுது திரைப்படம் பார்க்கும்போது ஒரு சில ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

அஜித்தின் முதல் திரைப்படமான அமராவதி, பாசமலர்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் அஜித்தின் குரலாக ஒலித்தது நடிகர் விக்ரம் என்பது இன்னும் பல அஜித் ரசிகர்கள் கூட அதிகம் அறியாத ஆச்சரிய தகவல்.

Also Read:  வான்கடேவில் குவிந்த 19,000 சிறுமிகள்.. "கனவுகள் மெய்ப்பட வேண்டும்..!” - நீடா அம்பானி மகிழ்ச்சி

இதே போல நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான காதலன்,ராசையா, விஐபி என பல்வேறு திரைப்படங்களில் பிரபுதேவாவின் குரலாக ஒலித்தவர் நடிகர் விக்ரம். இன்று திரைப்படம் பார்க்கும்பொழுது காதலன் திரைப்படத்தில் பிரபுதேவா சொல்லும் 91,92, 93 போன்ற எண்களில் நடிகர் விக்ரமின் குரல் பளிச்சிடுவதை நம்மால் உணர முடியும்.

இதே போல தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் அப்பாஸ் நடித்த காதல் தேசம் ஜாலி உள்ளிட்ட திரைப்படங்களில் அப்பாஸிற்கு நடிகர் விக்ரம் டப்பிங் பேசியுள்ளார். இதே போல 1998 ஆம் ஆண்டு ஹாலிவுட் வெளியான காந்தி திரைப்படத்தின் தமிழ் பதிப்பில் காந்தியாக ஒலித்ததும் நடிகர் விக்ரமின் குரல் தான்.

top videos

    தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெற்றிக்காக போராடிய நடிகர் விக்ரமிற்கு ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு பிறகே சேது படத்தின் மூலம் வெற்றி கிடைத்தது. இந்த இடைவெளியில் விக்ரம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தது சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் ஒவ்வொருவருக்கான நம்பிக்கை.

    First published:

    Tags: Cinema, Tamil News, Vikram