முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தனுஷ், சிம்பு, கார்த்தி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை - டாணாக்காரன் இயக்குநரின் அடுத்த பட அப்டேட்...!

தனுஷ், சிம்பு, கார்த்தி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை - டாணாக்காரன் இயக்குநரின் அடுத்த பட அப்டேட்...!

இயக்குநர் தமிழ்

இயக்குநர் தமிழ்

நடிகர்கள் தனுஷ், சிம்பு, கார்த்தி ஆகியோரிடம் அடுத்தப் படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகரும், இயக்குநருமான தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த படம், 'டாணாக்காரன்'. டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'காவலர் பயிற்சி' பள்ளியில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் விவாதத்தை ஏற்படுத்தியது.

'டாணாக்காரன்' படத்தில் விக்ரம் பிரபுவுக்கு நாயகியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். மேலும், லால், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாணாக்காரனை எஸ்ஆர் பிரகாஷ் பாபு, எஸ்ஆர் பிரபு, கோபிநாத், தங்க பிரபாகரன் ஆகியோர் தயாரித்திருந்தனர்.

விக்ரம் பிரபு இதில் போலீஸ் பயிற்சி பெறும் நபராக நடித்துள்ளார். இதுவரை நிறைய போலீஸ் கதைகள் வந்திருந்தாலும், காவலர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு காவலர் பயிற்சி மையத்தில் கொடுக்கப்படும் பயற்சியை மையப்படுத்தி எந்தப் படமும் வெளிவந்ததில்லை. டாணாக்காரன் அந்தப் பயற்சியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அகதாமியில் கொடுக்கப்படும் கடும் பயிற்சிகள்தான் யார் மீதும் யோசிக்காமல் போலீசார் லத்தியை வீச வைக்கிறது என்று இந்தப் படம் பேசியிருக்கும். இந்தப் படத்திற்காக இயக்குநர் தமிழ் மற்றும் படக்குழுவினர் அதிக அளவில் பாராட்டப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இயக்குநர் தமிழ் தனது அடுத்த பட அப்டேட் குறித்து பேசியுள்ளார். என் அடுத்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கேங்க்ஸ்டர் படமாக உருவாகும் இதில் நடிக்க தனுஷ், சிம்பு, கார்த்தி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published:

    Tags: Entertainment