முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஒருதலை ராகம் படத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்ட டி.ராஜேந்தர் பெயர்.. 43 வருட சம்பவம்!

ஒருதலை ராகம் படத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்ட டி.ராஜேந்தர் பெயர்.. 43 வருட சம்பவம்!

ஒருதலை ராகம்

ஒருதலை ராகம்

முதல்வாரம் ஆளில்லாமல் ஈயோட்டிய சேலத்தில் 145 நாள்கள் ஓடியது. இதேபோல் அனைத்து சென்டர்களிலும் படம் பிளாக் பஸ்டரானது. சில இடங்களில் ஒரு வருடத்தை கடந்து ஓடியது. ஆனாலும், படத்தை உருவாக்கிய டி.ராஜேந்தருக்கு முறையான கிரெடிட் தரப்படவில்லை. தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அவரது பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

43 வருடங்களுக்கு முன் ஒருதலை ராகம் பத்தோடு பதினொன்றாக திரையரங்குகளில் வெளியானது. வசீகரமான நட்சத்திரங்கள் இல்லை. இயக்குனர் இப்ராஹிம் என்ற ஏதோ புதுமுகம். இசையும் இளையராஜா இல்லை. யாராவது நம்பி அந்தப் படத்துக்கு செல்வார்களா?

இன்று ஒருதலை ராகம் வெளியாகியிருந்தால், இரண்டாவது ஷோவில் படத்தை மாற்றியிருப்பார்கள். தரமான படமா இல்லையா என்பது கேள்வியில்லை. குப்பை என்றாலும் கூட்டம் வருகிறதா? மின்சார செலவுக்கேனும் டிக்கெட் விற்காமல், படத்தை போடு என்றால் திரையரங்கு உரிமையாளர்கள் பாவம் என்ன செய்வார்கள். எண்பதுகளில் இப்படி இல்லை. எந்தப் படமாக இருந்தாலும் ஒருவாரம் திரையரங்குகள் கிடைக்கும். அதற்குள் பிக்கப்பானால் அடுத்தடுத்த வாரங்கள் படம் ஓடும். ஒருதலை ராகம் ஆளில்லாமல் ஒரு வாரத்தைத் தாக்குப் பிடித்தது. அதற்குள் வாய்மொழி விமர்சனமும், பாடல்களும் கொஞ்சம் கூட்டத்தைச் சேர்த்தது. மூன்றாவது வாரத்திலிருந்து ஹவுஸ்ஃபுல்.

முதல் வாரம் ஆளில்லாமல் ஈயோட்டிய சேலத்தில் 145 நாள்கள் ஓடியது. இதேபோல் அனைத்து சென்டர்களிலும் படம் பிளாக் பஸ்டரானது. சில இடங்களில் ஒரு வருடத்தை கடந்து ஓடியது. ஆனாலும், படத்தை உருவாக்கிய டி.ராஜேந்தருக்கு முறையான கிரெடிட் தரப்படவில்லை. தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அவரது பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது. மூலக்கதை, வசனம், பாடல் இசை, பாடல்கள் ஆகியவற்றிக்கு மட்டும் ராஜேந்திரன் என டி.ஆருக்கு கிரெடிட் தரப்பட்டது. இயக்கம் என தயாரிப்பாளர் தனது பெயரை - இ.எம்.இப்ராஹிம் - போட்டுக் கொண்டார். ஒரு வருடம் ஓடிய படத்தின் இயக்குனர் உரிய கிரெடிட் தராமல் ஏமாற்றப்பட்டால் அந்த வலி எப்படியிருக்கும் என்பது கற்பனைக்கு அப்பார்ப்பட்டது.

Also read... பாலியல் தொழிலாளி கதாபாத்திரம்.. நடிகையின் வாழ்க்கையையே தலைகீழாய் திருப்பிய திரைப்படம்!

ஒருதலை ராகத்தின் வெற்றியில் முக்கிய பங்கு டி.ஆரின் இசைக்கும், பாடல்களுக்கும் உண்டு. பாடல் வரிகளில் டி.ஆர்.  புயலை கிளப்பியிருந்தார். வாசமில்லா மலரிது..., கூடையில கருவாடு..., என் கதை முடியும் நேரமிது..., நான் ஒரு ராசியில்லா..., கடவுள் வாழும்..., எனஅனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டாயின. குறிப்பாக இது குழந்தை பாடும் தாலாட்டு இன்றும் வியந்து கேட்கப்படுகிற, பேசப்படுகிற பாடல். இதில் வரும் வரிகள் அனைத்துமே எதிர்மறையாக அமைந்திருக்கும்.

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

இது நதியில்லாத ஓடம்

நடை மறந்த கால்கள் தன்னின்

தடயத்தை பார்க்கிறேன்

வடம் இழந்த தேரது ஒன்றை

நாள்தோறும் இழுக்கிறேன்

சிறகிழந்த பறவை ஒன்றை

வானத்தில் பார்க்கிறேன்

சிறகிழந்த பறவை ஒன்றை

வானத்தில் பார்க்கிறேன்

உறவுராத பெண்ணை எண்ணி

நாளெல்லாம் வாழ்கிறேன்

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

வெறும் நாரில் கரம் கொண்டு

பூமாலை தொடுக்கிறேன்

வெறும் காற்றில் உளி கொண்டு

சிலை ஒன்றை வடிக்கிறேன்

விடிந்துவிட்ட பொழுதில் கூட

விண்மீனைப் பார்க்கிறேன்

விடிந்துவிட்ட பொழுதில் கூட

விண்மீனைப் பார்க்கிறேன்

விருப்பமில்லா பெண்ணை எண்ணி

உலகை நான் வெறுக்கிறேன்

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

உளமறிந்த பின்தானோ

அவளை நான் நினைத்தது

உறவுருவாள் எனதானே

மனதை நான் கொடுத்தது

உயிரிழந்த கருவைக் கொண்டு

கவிதை நான் வடிப்பது

உயிரிழந்த கருவைக் கொண்டு

கவிதை நான் வடிப்பது

ஒரு தலையாய் காதலிலே

எத்தனை நாள் வாழ்வது

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

இது நதியில்லாத ஓடம்"

ஒருதலை ராகம் காதல் திரைப்படம். ஆனால், படத்தில் நாயகன், நாயகி இருவரும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள். டூயட் பாடல் கிடையாது. அனைத்துப் பாடல்களையும் நாயகனே பாடியிருப்பார். எண்பதுகளில் தமிழ் திரையுலகை புரட்டிய காதல் படங்களில் ஒருதலை ராகம் முக்கியமானது. 1980 மே 2 வெளியான இப்படம் நேற்று 43 வது வருடத்தை நிறைவு செய்தது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Classic Tamil Cinema, T Rajendar