முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / "கமல் எனக்கு இன்ஸ்பிரேஷன்... அவருக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்ல..." - டி.ராஜேந்தர் ட்விட்டரில் உருக்கம்!

"கமல் எனக்கு இன்ஸ்பிரேஷன்... அவருக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்ல..." - டி.ராஜேந்தர் ட்விட்டரில் உருக்கம்!

சிம்பு - டி.ராஜேந்தர் - கமல்ஹாசன்

சிம்பு - டி.ராஜேந்தர் - கமல்ஹாசன்

ஏக் துஜே கேலியே படத்தின் மூலம் வட இந்தியாவில் கலக்கிய மாபெரும் கலைஞர் கமல்ஹாசன்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிம்பு நடிப்பில் பத்து தல படம் வருகிற 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இந்தப் படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களின் இயக்குநர் ஒபேலி என்.கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் பாடல்களும் டிரெய்லரும் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கின்றன.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன், கலையரசன், டிஜே அருணாசலம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதனையடுத்து தேசிங் பெரியசாமி இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சிம்புவுடன் இணைவது குறித்த ட்வீட் செய்திருந்த கமல்ஹாசன், சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது. இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் டி.ராஜேந்தர் கமல்ஹாசன் குறித்து பேசியதாவது, ஏக் துஜே கேலியே படத்தின் மூலம் வட இந்தியாவில் கலக்கிய மாபெரும் கலைஞர் கமல்ஹாசன். அவர் விக்ரம் படத்துல புதிய முயற்சியை செய்து எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். தனக்கென முத்திரையைப் பதித்த கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் படத்தின் மூலம் எனது மகன் சிலம்பரசனை, தேசிங் பெரியசாமி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்குகிறார்.

இதுவரை சிலம்பரசன் நடித்த படங்களிலேயே இந்த அளவுக்கு ஒரு பட்ஜெட் படத்தை உருவாக்குகிறார் என்று சொன்னால் கமலுக்கும், மகேந்திரனுக்கும், டிஷ்னிக்கும் ராஜ் கமல் நிறுவனத்துக்கும் எப்படி நன்றி சொல்றதுனு தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Kamal Haasan, Silambarasan