முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / என்னது! சூர்யாவின் கங்குவா படத்தின் பெயரில் ஏற்கனவே ரஜினி படமிருக்கிறதா? ஆச்சரியத் தகவல்

என்னது! சூர்யாவின் கங்குவா படத்தின் பெயரில் ஏற்கனவே ரஜினி படமிருக்கிறதா? ஆச்சரியத் தகவல்

சூர்யா - ரஜினிகாந்த்

சூர்யா - ரஜினிகாந்த்

சூர்யாவின் கங்குவா பட பெயரில் ஏற்கனவே ரஜினி படம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது. இது சூர்யாவில் 42 வது படம் என்பதால் சூர்யா 42 என்ற தற்காலிக தலைப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த படத்தின் தலைப்பை அறிவித்திருக்கின்றனர். சூர்யா - சிவா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு கங்குவா என தலைப்பு வைத்திருக்கின்றனர்.

இந்த திரைப்படம் இரண்டு வேறு காலகட்டங்களில், வரலாற்றுப் பின்னணியில் நடைபெறும் வகையில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் கங்குவா இரண்டு பாகங்களாக உருவாகிறது. இந்தப் படம் பான் இந்தியா படமாக 10 மொழிகளில் உருவாகிறது.

இதையும் படிக்க | காசு வந்தா காக்காவும் கலராகிடும்ன சொல்வாங்க... - பழைய வீடியோவை பகிர்ந்து பிரியா பவானி ஷங்கர் உருக்கம்

இதில் சூர்யாவுடன் பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்கிறார், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அதற்கான வியாபாரங்கள் ஒருபுறம் வேகம் எடுத்திருக்கின்றன. குறிப்பாக பாடல் உரிமை, டிஜிட்டல் உரிமை உள்ளிட்டவற்றை பெரும் தொகைக்கு விற்பனை செய்துள்ளனர். இந்தப் படத்தின் பாடல் உரிமையை சரிகம நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் கங்வா (Gangvaa) என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஹிந்திப் படம் இருப்பதாக ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர். இந்தப் படமானது தமிழில் வெற்றிபெற்ற மலையூர் மம்பட்டியான் படத்தின் ஹிந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் தியாகராஜன் நடித்திருந்த வேடத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor Suriya, Rajinikanth