முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விதித்த தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விதித்த தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்

தி கேரளா ஸ்டோரி

தி கேரளா ஸ்டோரி

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியிடப்படுவது தொடர்பாக படக்குழுவினர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் மறைமுக தடை விதிக்கக்கூடாது என்றும், மேற்குவங்கத்தில் விதித்த தடையை நீக்கியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதித்தது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை மறைமுகமாகவோ, நேரடியாகவோ தடை விதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எவ்விதத்திலும் தடை விதிக்கப்படவில்லை என்று கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், தி கேரளா ஸ்டோரி திரையிடப்படும் திரையரங்கிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

மேலும், திரைப்படத்தை பார்க்க செல்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தப்பட்டது. இதே போன்று மேற்குவங்கத்திலும், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மாநில அரசு விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. இதனிடையே, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில், 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டதாக தவறான தகவல் இடம்பெற்று இருப்பதாக மேற்குவங்க அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது- ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து முதல்வர் மகிழ்ச்சி

இதனை ஒப்புக்கொள்ளும் வகையில், 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டதற்கு உரிய ஆதாரம் இல்லை என்று படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலும் கூறப்பட்டது. இது புனையப்பட்ட கதை என்றும் படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், திரைப்படம் தொடங்கும் போது, இது புனையப்பட்ட கதை என்பதை குறிப்பிடுமாறு உத்தரவிட்டனர். இந்த தகவல், வரும் 20 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

First published: