முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / என்னது ! சன் டிவி விஜய சாரதியின் அப்பா இந்த நடிகரா? வெளியான போட்டோ

என்னது ! சன் டிவி விஜய சாரதியின் அப்பா இந்த நடிகரா? வெளியான போட்டோ

விஜயபாரதி

விஜயபாரதி

ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் விஜயசாரதி, தொகுப்பாளராக பணியாற்றியபோது நடந்த அனுபவங்களை பகிர்ந்துவருகிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சன் டிவியில் ஒளிபரப்பான நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் விஜயசாரதி. அந்த நிகழ்ச்சியில் பின்னால் நடந்துகொண்டே அவர் பேசி தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியிருந்தார். தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

நடிகர் சிவகுமாரின் திருமணத்தில் மறைந்த நடிகரும் விஜயசாரதியின் அப்பாவுமாகிய சசிகுமார்

சித்தி உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் விஜய சாரதி நடித்திருக்கிறார். குறிப்பாக படையப்பா படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் மருமகனாக நடித்திருப்பார். ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் விஜயசாரதி, தொகுப்பாளராக பணியாற்றியபோது நடந்த அனுபவங்களை பகிர்ந்துவருகிறார்.

இந்த நிலையில் நடிகர் சிவகுமார் அவரது மனைவி ஆகியோருடன் பழைய நடிகர் சசிகுமார் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, அன்பிற்கினிய சிவகுமார் பெரியப்பா, (அப்படித்தான் அழைக்க சொல்வார்) திருமணத்தில் எனது அம்மாவும் அப்பாவும். எனது தந்தை மறைந்த நடிகர் சசிகுமார். எல்லாம் நினைவுகள் மட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து விஜயசாரதியின் அப்பா மறைந்த நடிகர் சசிகுமாரா என ரசிகர்கள் ஆச்சரியம் தெரிவித்துவருகின்றனர். காரணம் இதுவரை விஜயசாரதி இந்தத் தகவலை எங்கும் வெளியிட்டதில்லை. நடிகர் சசிகுமார் காசேதான் கடவுளடா, ராஜபார்ட் ரங்கதுறை, சூர்யகாந்தி, என்னை போல் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

First published:

Tags: Sun TV