முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கால் வீக்கம்.. சரத்பாபுக்கு அரிய வகை நோய்.. சுஹாசினி கொடுத்த எச்சரிக்கை

கால் வீக்கம்.. சரத்பாபுக்கு அரிய வகை நோய்.. சுஹாசினி கொடுத்த எச்சரிக்கை

சரத்பாபு - சுஹாசினி

சரத்பாபு - சுஹாசினி

நடிகர் சரத்பாபுவுக்கு மல்டிபிள் மைலோமா எனும் அரிய வகை நோய் ஏற்பட்டிருப்பதாக நடிகை சுஹாசினி அதிர்ச்சி தகவலை பகிர்ந்திருக்கிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல் நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சரத்பாபு நேற்று காலமானார். அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நடிகர் சரத்பாபுவின் இறுதிச்சடங்குகள் சென்னையில் இன்று மதியம் நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகை சுஹாசினி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''கடந்த 92 நாட்களாக சரத்பாபு மருத்துவமனையில் இருந்தார். முதல் 2 மாதங்கள் பெங்களூரில் இருந்தார். அவர் பீவர் காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களால் முதலில் அவருக்கு என்ன பிரச்னைனு கண்டுபிடிக்க முடியல. பின்னர் அவருக்கு மல்டிபிள் மைலோமா எனும் நோய் இருப்பது தெரியவந்தது.

பின்னர் ஹைதராபாத்தில் அனுமதிக்கப்பட்டார்.  நானும் சிரஞ்சீவியும் போய் பார்த்தோம். நாங்கள் எவ்ளோ முடியுமோ அவரை காப்பாத்துவோம் என மருத்துவர்கள் சொன்னார்கள். எதிர்பாராதவிதமா நேற்று அவர் இறந்துட்டார்.

இதையும் படிக்க | ஆங்கிலேயரை அலற வைத்த தமிழ் திரைப்படம்.. உடனடியாக தடை செய்து உத்தரவு.!

அவர் வட இந்தியாவைச் சேர்ந்தவரா இருந்தாலும் ஆந்திராவில் அவங்க குடும்பம் செட்டில் ஆனாங்க. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நம்ம ஊரை சேர்ந்தவர்னு தான் அவரைக் கொண்டாடினோம்.  தமிழில் தான் அதிகமா நடிச்சிருக்காரு. ரொம்ப ஜென்டில்மேன். ஹேன்ட்சம். எல்லா மொழிகளும் பேசக் கூடிய நடிகர நாங்க பார்த்தது இல்ல. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட எல்லோர் கூடவும் நட்புடன் இருந்தார்.

top videos

    மல்டிபிள் மைலோமா 4வது ஸ்டேஜ்ல தான் கண்டுபிடிச்சாங்க. சைவ உணவு தான் சாப்பிடுவார். நல்லா உடற்பயிற்சி செய்வார். அவரது காலில் வீக்கம் வந்தது. உடல் எடை  குறைந்தார். நடிகர்கள் மட்டும் இல்ல. இந்த மாதிரி அறிகுறி இருந்தா எல்லாரும் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Actor, Died, Health