முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''இந்தியன் 2 கெட்டப்பில் கமல் இருக்கிறார்.. அவரால வர முடியல..'' சரத்பாபு மறைவு குறித்து சுஹாசினி பேட்டி

''இந்தியன் 2 கெட்டப்பில் கமல் இருக்கிறார்.. அவரால வர முடியல..'' சரத்பாபு மறைவு குறித்து சுஹாசினி பேட்டி

கமல்ஹாசன் - சரத்பாபு - சுஹாசினி

கமல்ஹாசன் - சரத்பாபு - சுஹாசினி

Sarath babu: சரத்பாபுவின் மறைவுக்கு கமல்ஹாசன் வராதது குறித்து சுஹாசினி விளக்கமளித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல் நலக்குறைவால் ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சரத்பாபு நேற்று காலமானார். அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நடிகர் சரத்பாபுவின் இறுதிச்சடங்குகள் சென்னையில் இன்று மதியம் நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகை சுஹாசினி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''கடந்த 92 நாட்களாக மருத்துவமனையில் இருந்தார். முதல் 2 மாதங்கள் பெங்களூரில் இருந்தார். அவர் ஃபீவர் காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களால் முதலில் அவருக்கு என்ன பிரச்னைனு கண்டுபிடிக்க முடியல. பின்னர் அவருக்கு மல்டிபிள் மைலோமா எனும் நோய் இருப்பது தெரியவந்தது.

பின்னர் ஹைதராபாத்தில் அனுமதிக்கப்பட்டார். எதிர்பாராதவிதமாக நேற்று அவர் இறந்துட்டார். நானும் சிரஞ்சீவியும் போய் பார்த்தோம். நாங்கள் எவ்ளோ முடியுமோ அவரை காப்பாத்துவோம் என மருத்துவர்கள் சொன்னார்கள்.

இதையும் படிக்க |  ’சிகரெட் அட்வைஸ்.. அண்ணாமலை டயலாக்..’ சரத்பாபு குறித்து உருக்கமாக பேசிய ரஜினிகாந்த்!

அவர் வட இந்தியாவை சேர்ந்தவரா இருந்தாலும் ஆந்திராவில் அவங்க குடும்பம் செட்டில் ஆனாங்க. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நம்ம ஊரை சேர்ந்தவர்னு தான் அவரைக் கொண்டாடினோம்.  தமிழில் தான் அதிகமா நடிச்சிருக்காரு. ரொம்ப ஜென்டில்மேன். ஹேன்ட்சம். எல்லா மொழிகளும் பேசக் கூடிய நடிகரை நாங்க பார்த்தது இல்ல. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட எல்லோர் கூடவும் நட்புடன் இருந்தார்.

மல்டிபிள் மைலோமா 4வது ஸ்டேஜ்ல தான் கண்டுபிடிச்சாங்க. சைவ உணவு தான் சாப்பிடுவார். நல்லா உடற்பயிற்சி செய்தார். அவர் காலில் வீக்கம் வந்தது. உடல் எடை குறைந்தார். நடிகர்கள் மட்டும் இல்ல. இந்த மாதிரி அறிகுறி இருந்தால் எல்லோரும் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.

சிரஞ்சீவி, கமல் ஆகியோரால் வரமுடியவில்லை .தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்தனர். சரத்பாபுவின் இறுதி சடங்கை கமல்ஹாசன் உடன் இருப்பவர்கள் செய்து வருகின்றனர்.

top videos

    கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் மேக்கப் போட்டுள்ளார். அதனுடன் வெளியே வர முடியாது என்பதால்  தொலைபேசி வாயிலாக பேசினார் என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Kamal Haasan