முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பாகுபலியை மோசமான படம் என்றனர்... சொந்த மாநிலத்திலிருந்து வந்த விமர்சனம் குறித்து பகிர்ந்த ராஜமௌலி

பாகுபலியை மோசமான படம் என்றனர்... சொந்த மாநிலத்திலிருந்து வந்த விமர்சனம் குறித்து பகிர்ந்த ராஜமௌலி

ராஜமௌலி

ராஜமௌலி

பாகுபலிக்கு தனது சொந்த மாநிலத்தில் இருந்து வந்த விமர்சனத்தால் கலங்கி நின்றதாக ராஜமௌலி வருத்தம் தெரிவித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சிறப்பான பங்களிப்பை வழங்கினால் உங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும். ஆனால் உங்கள் குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ உங்களது பணியை நிராகரித்தால் அது உங்களை காயப்படுத்த மட்டும் செய்யாது, உங்கள் நம்பிக்கையை உடைக்கும். மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டால் அது உங்களுக்கு மன அழுத்ததை ஏற்படுத்தும்.

இதே போன்ற ஒரு மனநிலையில் தான் பாகுபலி முதல் பாகம் வெற்றிபெறுமா இல்லையா என இயக்குநர் ராஜமௌலியும் இருந்திருக்கிறார். இதுகுறித்து ஒரு நிகழ்வில் பேசிய ராஜமௌலி, ''பாகுபலி முதல் பாகத்துக்கு வந்த விமர்சனங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை.

இதையும் படிக்க |  ஆம்பள படத்தில் கிரணின் மகளாக நடித்தவரா இவர்? - வைரலாகும் போட்டோஸ்

பாகுபலி தமிழ் நாடு, கேரளா, வட இந்தியா, அமெரிக்கா, துபாய் ஆகிய இடங்களில் வெளியாகி நல்ல விமர்சனஙகள் கிடைத்தன. ஆனால் ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இது மோசமான படம். இந்தப் படம் மிகப்பெரிய தோல்வியை தழுவும் என்று பேசினர்.

தொடர்ந்து 3 வருடங்களாக என்னை ஆதரித்த தயாரிப்பாளர் குறித்து வருந்தினேன். அவர் இந்தப் படத்துக்காக நிறைய பணம் செலவிட்டார். அந்த நேரத்தில் எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை என வருத்தம் தெரிவித்தார்.

First published:

Tags: Rajamouli