முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / போதை பொருள் பயன்படுத்துறாங்க... தவறா நடந்துகிறாங்க.. - திரைப்படங்களில் நடிக்க பிரபல நடிகர்களுக்கு தடை

போதை பொருள் பயன்படுத்துறாங்க... தவறா நடந்துகிறாங்க.. - திரைப்படங்களில் நடிக்க பிரபல நடிகர்களுக்கு தடை

ஷேன் நிகம் - ஸ்ரீநாத் பஷி

ஷேன் நிகம் - ஸ்ரீநாத் பஷி

ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பஷி ஆகியோர் திரைப்படங்களில் நடிக்க கேரள திரையுலகம் தடை விதித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மலையாள திரையுலகில் இளம் நடிகர்களான ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பஸி இருவரையும் படங்களில் நடிக்க கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், கேரள திரைப்பட பணியாளர்கள் அமைப்பு மற்றும் மலையாள திரைப்பட நடிகர் சங்கம் ஆகிய அமைப்புகள் தடை விதித்துள்ளது. கொச்சியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பஷி இருவரும் போதைப் பொருள் பயன்படுத்திய பிறகு படப்பிடிப்பு தளத்துக்கு வருவதாகவும் பிற நடிகர்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ரெஞ்சித் என்பவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க | கார்த்தியின் திருமணம் நடக்காது என சித்தர் கொடுத்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் சீரியல்!

கடந்த வருடம் செப்டம்பரில் ஸ்ரீநாத் பஷி தொகுப்பாளருக்கு தொல்லை கொடுத்ததாகவும் அப்போது அவர் போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நிறைய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளும் ஸ்ரீநாத், அவற்றுக்கு ஒரே தேதியை கொடுப்பதாக அவர்மீது குற்றச்சாட்டு உள்ளது.

அதே போல ஷேன் நிகம் வெயில் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, பாதியில் சென்று தனது ஹேர் ஸ்டைலை மாற்றியிருக்கிறார். இதுகுறித்து கேட்ட தயாரிப்பாளரை ஷேன் நிகம் கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.

top videos
    First published:

    Tags: Ban, Kerala, Malayalam actor