முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கமல் படத்துக்காக முதன்முறையாக பிரபல இசையமைப்பாளருடன் இணையும் சிவகார்த்திகேயன் - வெளியான அறிவிப்பு

கமல் படத்துக்காக முதன்முறையாக பிரபல இசையமைப்பாளருடன் இணையும் சிவகார்த்திகேயன் - வெளியான அறிவிப்பு

ராஜ்குமார் பெரியசாமி - கமல்ஹாசன் - சிவகார்த்திகேயன்

ராஜ்குமார் பெரியசாமி - கமல்ஹாசன் - சிவகார்த்திகேயன்

கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் முதன்முறையாக பிரபல இசையமைப்பாளருடன் சிவகார்த்திகேயன் இணையவிருக்கிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, இயக்குநர் மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

இதனையடுத்து கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்தப் படத்தை ரங்கூன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

இதையும் படிக்க |  பொன்னியின் செல்வனில் சிறுவயது குந்தவை, இந்த சீரியல் நடிகையின் மகளா?- வைரலாகும் போட்டோஸ்

இதுவரை சிவகார்த்திகேயன் அனிருத், டி.இமான், யுவன் ஷங்கர் ராஜா, ஹிப்ஹாப் தமிழா ஆகியோரின் இசையில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்துக்காக முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜி.வி.பிரகாஷ் இணையவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

top videos
    First published:

    Tags: Kamal Haasan, Sivakarthikeyan