முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரசிகர்கள் தொல்லையா? சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவின் பின்னணி என்ன?

ரசிகர்கள் தொல்லையா? சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவின் பின்னணி என்ன?

நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரிலிருந்து தற்காலிகமாக பிரேக் எடுத்துக்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரிலிருந்து தற்காலிகமாக பிரேக் எடுத்துக்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரிலிருந்து தற்காலிகமாக பிரேக் எடுத்துக்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதியும் அயலான் படம் தீபாவளியை முன்னிட்டும் திரைக்குவரவிருக்கிறது. இதில் அயலான் படம் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகு வெளியாகவிருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயலான் படம் அதிக எண்ணிக்கையிலான சிஜிஐ காட்சிகள் கொண்ட படமாக இருக்கும். படம் முழுவதும் வரும் வேற்று கிரக வாசி அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 4500க்கும் அதிகமான விஎஃப்எக்ஸ் காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ் ஆக்சன் படமாக அயலான் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | நடிகை ஆலியா பட் வெளியிட்ட ஸ்டன்னிங் போட்டோஸ் - வாவ் சொல்லும் ரசிகர்கள்!

இந்தப் படத்தின் கிளிம்பஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. இதனையடுத்து தற்போது நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

இந்த நிலையில் தற்காலிகமாக விலகுவதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். மேலும் தனது படங்களின் அப்டேட்டுகள் அனைத்தும் அவரது டீம் வெளியிடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

top videos

    சிவகார்த்திகேயன் ட்விட்டரில் 7 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைக் கொண்டிருக்கிறார். அவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் இருக்கிறார்கள். இதனையடுத்து படங்களின் டீசர்கள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட அவருக்கு அதிக அளவு கோரிக்கைகள் வருவதாகவும் இதனால் ஏற்படும் தர்ம சங்கடங்களை தவிர்க்கவே ட்விட்டரிலிருந்து சிவகார்த்திகேயன் தற்காலிகமாக விலகுவதாகவும் கூறப்படுகிறது.

    First published:

    Tags: Sivakarthikeyan