முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் - அதிதி ஷங்கர்

சிவகார்த்திகேயன் - அதிதி ஷங்கர்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு வெளியான பிரின்ஸ் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதனைத்தொடர்ந்து, சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கிவருகிறார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் மிஷ்கின், சரிதா, புஷ்பா பட வில்லன் சுனில், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

இதையும் படிக்க | அட! நடிகை அசினின் மகளா இது? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

இந்தப் படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திலிருந்து சீனு சீனு பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் மாவீரன் படம் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

top videos
    First published: