முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / படம் முழுக்க வரும் ஏலியன்.. இந்தியாவில் முதல் படம் .... வெளியானது சிவகார்த்திகேயன் நடித்த அயலான் அப்டேட்

படம் முழுக்க வரும் ஏலியன்.. இந்தியாவில் முதல் படம் .... வெளியானது சிவகார்த்திகேயன் நடித்த அயலான் அப்டேட்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ள அயலான் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

டைம் டிராவல் ஜானரில் மிகக் குறைவான பட்ஜெட்டில் இன்று நேற்று நாளை படத்தை இயக்கி தமிழ் திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியவர் இயக்குநர் ரவிக்குமார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான அந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். ஏலியனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நட்பு தான் அயலான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்திலிருந்து வேற லெவல் சகோ என்ற பாடல் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

இதையும் படிக்க | பிரபல நடிகர் சரத் பாபு கவலைக்கிடம்.. உடலில் என்ன பிரச்னை? வெளியான தகவல்!

படம் துவங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாகியும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாததால் ஒருவேளை படம் கைவிடப்பட்டதா என ரசிகர்ளிடையே கேள்வி எழுந்தது. இந்த நிலையில் அயலான் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தின் அப்டேட் நாளை காலை 11:04 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அயலான் படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் சிஜிஐ காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணிபுரிந்துள்ளோம். அயலான் ஒரு பான் இந்தியன் திரைப்படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான சிஜிஐ காட்சிகள் கொண்ட படமாக இறுக்கும்.

top videos

    படம் முழுவதும் வரும் வேற்றுகிரக வாசி அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 4500க்கும் அதிகமான விஎஃப்எக்ஸ் காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ் ஆக்சன் படமாக அயலான் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Sivakarthikeyan