இன்று நேற்று நாளை படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு இயக்குநர் ரவிகுமார், சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். ஏலியனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நட்பு தான் அயலான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்திலிருந்து வேற லெவல் சகோ என்ற பாடல் ஏற்கனவே வெளியாகியிருந்தது.படம் துவங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாகியும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாததால் ஒருவேளை படம் கைவிடப்பட்டதா என ரசிகர்ளிடையே கேள்வி எழுந்தது.
இதையும் படிக்க | Video: நடிகர் விஜய்யின் 'தளபதி 68' - மேடையில் உறுதி செய்த ஜீவா - வைரலாகும் வீடியோ
இந்தப் படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக இன்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஏலியன் பற்றிய கதை என்று கூறப்படும் நிலையில் இந்தப் படத்திலிருந்து அது தொடர்பாக எந்த வீடியோவும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் முதன்முறையாக ஏலியன் இடம்பெற்ற கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
Thank you all for your love for the poster ❤️ Here is a glimpse of our #Ayalaan Live in action 👽#AyalaanFromDiwali2023 💥@Ravikumar_Dir @arrahman @kjr_studios @24amstudios @Phantomfxstudio @Rakulpreet @ishakonnects @SharadK7 @iYogiBabu #Karunakaran #Niravshah @AntonyLRuben… pic.twitter.com/9yWdZXpQaa
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 24, 2023
முன்னதாக தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயலான் படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் சிஜிஐ காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணிபுரிந்துள்ளோம். அயலான் ஒரு பான் இந்தியன் திரைப்படம். அதிக எண்ணிக்கையிலான சிஜிஐ காட்சிகள் கொண்ட படமாக இருக்கும்.
படம் முழுவதும் வரும் வேற்று கிரக வாசி அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 4500க்கும் அதிகமான விஎஃப்எக்ஸ் காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ் ஆக்சன் படமாக அயலான் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.