குக் வித் கோமாளி சீசன் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் மற்றும் கலை இயக்குநரும் நடிகருமான கிரண் ஆகியோர் புதிய போட்டியாளர்களாக களமிறங்கினர்.
கடந்த 3 சீசன்களாக கோமாளியாக சிவாங்கி தனது இன்னசென்டான நடவடிக்கைகள், நிகழ்ச்சிக்கு இடையே அவர் பாடும் பாடல்கள் என ஃபேவரைட் கோமாளியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனையடுத்து குக்காக களமிறங்கி ஆச்சரியமளித்தார். முதலில் சொதப்பினாலும் மெல்ல தனது திறமையை வெளிப்படுத்தி அசத்தினார் சிவாங்கி.
கடந்த சில வாரங்களுக்கு முன் எலிமினேஷன் ரவுண்டில் விஜே விஷால் மற்றும் ஷிவாங்கி போட்டி போட்டனர். இதில் விஜே விஷால் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இரண்டு முறை 'குக் ஆஃப் தி வீக்' வாங்கிய விஜே விஷால் எலிமினேட் ஆகியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. மேலும் ஷிவாங்கியை விஜய் வேண்டுமென்றே காப்பாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையும் படிக்க | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உணவை சாப்பிட்டு மயங்கி விழுந்த சிறுவன் - வைரலான வீடியோ!
இந்த சர்ச்சைக்கு சிவாங்கி உங்களை மகிழ்விக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். இந்த ஷோவை உள்ளபடியே பார்த்து மகிழுங்கள். ஒருவரை குறைவாக மதிப்பிடுவது ஈஸி என பதிலளித்தார்.
இந்த நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சிவாங்கி பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் அடுத்த குக் வித் கோமாளி சீசனில் கலந்துகொள்வீர்களா? எனக் கேட்க, அது நிச்சயம் நடக்காது, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என பதிலளித்திருக்கிறார். ஒரு சீசனில் போட்டியாளராக கலந்துகொள்பவர் அடுத்த சீசனில் கலந்துகொள்ள முடியாது என்பதால் அவர் இப்படி தெரிவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cooku with Comali, Vijay tv