10 மொழிகளில் 10 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய ஸ்வர்ணலதா, கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். இளமையிலிருந்து பாடல் மீதும் இசை மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தந்தையும் இசைக்கலைஞர் என்பதால் அவருக்கு இசையின் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால் ஸ்வர்ணலதா என்று பெயரிட்டனர்.
பள்ளிகாலம் கேரளாவிலும் பின்னர் கர்நாடகாவிலும் அவருக்கு இருந்தது. மூன்று வயதிலிருந்து பாட ஆரம்பித்த ஸ்வர்ணலதா, தன் படிப்பை முடித்துக் கொண்டு 1986 ஆம் ஆண்டு பொழுதில் சென்னையில் குடியேறினார். திரைத் துறையில் அவருக்கான முதல் வாய்ப்பை கொடுத்தவர் இசை சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன். நீதிக்கு தண்டனை என்ற படத்தில் சின்னஞ்சிறு கிளியே என்ற பாடல் மூலம் தமிழ் திரை உலகில் 16 வயதில் அறிமுகமானார். முதல் பாடலிலேயே பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் உடன் பாடும் அனுபவம் அவருக்கு கிடைத்தது.
அதன் பின்னர் அவருக்கு வாய்ப்புகள் செல்வமாக குவியத் தொடங்கியது. இளையராஜா கோலோச்சிய எண்பதுகளின் இறுதியில் திரைத்துறைக்கு வந்தாலும், அவருடைய இசையமைப்பில் பல்வேறு படங்களுக்கு பல்வேறு நடிகைகளுக்கு பின்னணி குரலாக இருந்து பாடலை பாடி கொடுத்திருக்கிறார் ஸ்வர்ணலதா. இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், மணிசர்மா, தேவா, யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ், ஜெயராஜ், வித்யாசாகர் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் சுவர்ணலதாவுக்கு வாய்ப்பை கொடுக்க அதைக் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார்.
90களின் ஆரம்ப காலகட்டத்தில் பட்டி தொட்டி எங்கும் கலக்கிய சின்னத்தம்பி படத்தின் "போவோமா ஊர் கோலம்" என்ற பாடல் இன்று வரை இசை ரசிகர்களுக்கு விருந்தாய் அமைந்திருக்கிறது. மெல்லிசை குரலில் இருந்து, விஜயகாந்த் நடிப்பில் கேப்டன் பிரபாகரன் படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஆடும், ‘ஆட்டமா தேரோட்டமா’ என்ற பாடல் அவர் குரலில் ரசிகர்களை தன் பக்கம் இழுக்க முக்கிய காரணமாக அமைந்தது. அதன் பின்னர் ராக்கம்மா கையத்தட்டு, குயில் பாட்டு என்ற பாடல்கள் இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் பாடல்கள்.
இதையும் படிக்க : இதுதான் கருணாநிதி.. நகைச்சுவை படத்தை வசனத்தில் மெறுகேற்றி அரசியல் படமாக்கிய சம்பவம்!
ஏ.ஆர்.ரகுமான் இசையில், பாரதிராஜாவின் இயக்கத்தில் பெண் சிசு கொலையை மையமாக வைத்து எடுத்த படம் கருத்தம்மா அந்த படத்தில் போறாளே பொன்னுத்தாயி என்ற பாடல், அவருக்கென்று இசைத்துறையில் மிகப்பெரிய அங்கீகாரத்தை மட்டுமல்லாமல் தேசிய விருது, மாநில விருது என்று இரு விருதுகளை வாங்க முக்கிய காரணமாக அமைந்தது. 1980, 1990 களில் இசை துறையில் தமிழ் திரையுலக ரசிகர்களையும் இசை ரசிகர்களையும் இவரது பாடல்கள், கட்டியணைத்தது. அதிலும் இளையராஜா இசையில் சத்ரியன் படத்தில் அவர் பாடிய மாலையில் யாரோ மனதோடு பேச என்ற பாடல் இன்றளவும் வைரகல்லாக உள்ளது. அதேபோல உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் படத்தில் "என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பெயர் என்னடி" என்ற பாடலும் ரசிகர்களின் மனதில் நீங்கா பாடலாக இருக்கிறது.
90களில் வெளியான பெரும்பாலான படங்களில் ஸ்வர்ணலதா பாடல்கள் இல்லாத படம் என்று ஒன்று, இரண்டு மட்டுமே என்று சொல்லும் அளவுக்கு அவர் பாடல்கள் இருந்தன. ஏ.ஆர்.ரகுமான் இசையில் 2000 ஆண்டு அலைபாயுதே படத்தில் எவனோ ஒருவன், என்ற பாடல் காதலின் சோகத்தை அள்ளிக் கொடுக்கும் பாடலாக அமைந்தது.
இப்படி அவரது பாடல்கள், தமிழ் திரையுலகையும் தாண்டி மலையாளம் கன்னடம் தெலுங்கு ஹிந்தி என்று பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது, ஒரு தேசிய விருது, மூன்று மாநில விருது, 5 சினிமா எக்ஸ்பிரஸ் விருது பெற்றவர் ஸ்வர்ணலதா. இந்த நிலையில் தான் 2010 ஆம் ஆண்டு அவருக்கு 37-ம் வயதில் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி சென்னையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மரணித்தார்.
இந்த மண்ணை விட்டு சென்று 13 ஆண்டுகள் ஆனாலும் அவரது பிறந்தநாள் கொண்டாடும் வகையில், தன் குரல் வளத்தால் இன்றளவும் இசை ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறார் ஸ்வரங்களின் அரசி ஸ்வர்ணலதா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cinema 18, Singer, Tamil Cinema, Tamil Nadu