பாடலாசிரியர் மனோ தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இசை உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். சிங்கார வேலன் உள்ளிட்ட சில படங்களில் மனோ நடித்திருக்கிறார். கடைசியாக சிவா நடிப்பில் வெளியான சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் எனும் படத்தில் நடித்திருந்தார்.
சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் படத்தின்போது அளித்த பேட்டியில் மனோ பேசியதாவது, ''நீங்கள் நடிக்கச் சென்றால் உங்களுக்காக பாடல் காத்திருக்காது என்று இளையராஜா கூறினார். ஏனென்றால் சிங்காரவேலன் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் 15க்கும் மேற்பட்ட பாடல்களை படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் பாடி கொடுத்தேன். அப்போதுதான் இளையராஜா இதனை தெரிவித்தார். அது மிகப்பெரிய எச்சரிக்கையாக நான் எடுத்துக் கொண்டேன் என்று பேசினார்.
இதையும் படிக்க | இதனால் தான் அஜித்தின் ஏகே 62 பட அப்டேட் தாமதமாகிறதா? வெளியான காரணம்
நடிகர் ரஜினிகாந்த் படங்கள் தெலுங்கில் வெளியாகும்போதெல்லாம் அவருக்காக தெலுங்கில் டப்பிங் பேசியிருக்கிறார் மனோ. அதே போல நடிகர் கமல்ஹாசனுக்கு எஸ்பிபி தெலுங்கில் டப்பிங் பேச, சதிலீலாவதி மற்றும் பம்மல் கே சம்மந்தம் படங்களில் மட்டும் மனோ டப்பிங் பேசியிருப்பார்.
Bestowed with #Doctorate by Richmond Gabriel University on my completion more then 25k songs 15 Indian languages and 38years in Indian musical industry as a singer and musician.
Humbled, Honoured and much love to all who has supported me, all always 💐 pic.twitter.com/lEkMxmALPt
— Dr Mano (@ManoSinger_Offl) April 16, 2023
இந்த நிலையில் மனோ தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு ரிச்மண்ட் கேப்ரியல் யுனிவர்சிட்டி டாக்டர் பட்டம் வழங்கியிருப்பதை அறிவித்திருக்கிறார். அவரது பதிவில், 15 இந்திய மொழிகளில் 25 ஆயிரம் பாடல்கள், 38 வருடங்கள் இந்திய இசை துறையில் சாதனை புரிந்ததற்காக ரிச்மண்ட் கேப்ரியல் யூனிவர்சிட்டி எனக்கு டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. என்ன நேசித்தவர்களுக்கு அன்பும் நன்றியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.