முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 10 வருசத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம்... மணிகண்டனை புகழ்ந்த சின்மயி!

10 வருசத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம்... மணிகண்டனை புகழ்ந்த சின்மயி!

சின்மயி மற்றும் மணிகண்டன்

சின்மயி மற்றும் மணிகண்டன்

மணிகண்டன் பல்வேறு திறமைகளை கொண்டிருப்பவர்.. அவர் அதிகமாக கொண்டாடப்பட வேண்டும் என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

காலா, ஜெய்பீம் படங்களின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் மணிகண்டன். இவர் தற்போது நடித்துள்ள படம் குட் நைட். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தில், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘குறட்டை’யால் ஒரு மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் வருகின்ற 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டும் படக்குழு சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் - 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் மணிகண்டன் முன்னனி நடிகர்கள் பலரின் குரலில் பேசிய அசத்தினார்.

முதலில் அவர் அஜித்தின் முந்தைய படங்களில் அவரது குரல் எப்படி இருக்கும் தற்போது எப்படி இருக்கும் என்று பேசி இருக்கிறார். அதிலும் வாலி படத்தில் அஜித் எப்படி பேசினாரோ அதேபோல் பேசி அந்த நிகழ்ச்சியில் இருந்தவர்களை அசத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து நடிகர் கிஷோர் போல் பேசி இருக்கிறார். அதன் பின் தமிழ் சினிமாவின் ஆன்டனியா இருக்கும் ரகுவரன் போல் பேசி இருக்கிறார். யாரடி நீ மோகினி படத்தில் ரகுவரன் எப்படி பேசி இருப்பாரோ அதேபோல் மணிகண்டன் பேசிய மணிகண்டன் அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பாடகி சின்மயி அந்த வீடியோவை பகிர்ந்து மணிகண்டன் உடனான தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

Also read... நயன்தாரா அழகி.. விஜய் சேதுபதி அடக்கமானவர்.. கோலிவுட் நடிகர்களை புகழ்ந்து தள்ளிய ஷாருக்கான்!

அந்த பதிவில் கூறியிருப்பதாவது, மணிகண்டன் பல்வேறு திறமைகளை கொண்டிருப்பவர்.. அவர் அதிகமாக கொண்டாடப்பட வேண்டும்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, என்னுடைய ப்ளூ எலிப்பெண்ட் என்ற நிறுவனம் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பயற்சி வீடியோக்களுக்கு மொழிபெயர்ப்பு, டப்பிங் போன்ற பணிகளை செய்து கொடுத்து வந்தோம்.

கடும் பணி நெருக்கடியால் சுமார் இரண்டு வாரங்களுக்கு மேலாக உறக்கம் இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருந்தோம். எங்களுடன் இருந்த மூவர் குழுவில் மணியும் ஒருவர். பயிற்சி வீடியோவில் வயதான பஞ்சாபி முதியவர் உள்பட அனைவருக்கும் குரல் கொடுத்து எங்களை அசத்திவிட்டார் மணிகண்டன். உறக்கமின்றி பணியாற்றிய அந்த நாளில், பணியை மகிழ்ச்சிகரமாக மாற்றியது மணி தான் என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Chinmayi