சிம்புவின் சிலம்பாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சனா கான். தொடர்ந்து பயணம், தம்பிக்கு எந்த ஊரு போன்ற படங்களில் நடித்திருந்தார். அயோக்யா உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடநமாடியுள்ளார். இதுதவிர இந்தி, தெலுங்கு படங்களில் சனா கான் நடித்திருக்கிறார். மேலும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு இறுதி நாள் வரை வந்து இரண்டாம் இடம் பிடித்தார்.
சமீப காலமாக திரைப்படங்கள் எதிலும் நடிக்கவில்லை. சனா கான் 2020 ஆம் ஆண்டு முஃப்தி அனஸ் சயத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிஜாப் அணிந்த போட்டோவை பகிர்ந்திருக்கிறார்.
அவரது பதிவில், எனது கடந்தகால வாழ்க்கையில் பெயர், புகழ், பணம் எல்லாம் என்னிடம் இருந்தன. ஆனால் நிம்மதி இல்லாமல் இருந்தது.
View this post on Instagram
கடந்த 2019 ஆம் ஆண்டு ரம்ஜானின் போது கனவில் கல்லறை வந்தது. இதுதான் உன் முடிவு என கடவுள் சொல்வது போல இருந்ததது. அதன் பின் இஸ்லாமிய உரைகளை கேட்க ஆரம்பித்தேன். அதில் உங்கள் கடைசி நாள் ஹிஜாப் அணிந்த முதல் நாளாக இருக்க விரும்பவில்லை என்ற வாசகம் என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது. மறுநாள் எனது பிறந்த நாள். அன்றிலிருந்து ஹிஜாப் அணிய ஆரம்பித்தேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற இஃப்தார் விருந்தில் தனது கணவர் முஃப்தி அனஸ் சயத்துடன் சனா கான் கலந்துகொண்டார். இந்த விழாவில் தனது அவரது கணவர் சனா கானை கையைப் பிடித்து விறுவிறுவென இழுத்து செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்ணை இப்படியா இழுத்து செல்வது என ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சனா கான் அளித்துள்ள விளக்கத்தில், “எனக்காக கவலைப்பட்டதற்கு நன்றி. எங்கள் கார் டிரைவரை எங்களால் அழைக்க முடியவில்லை. நான் நீண்ட நேரம் அப்பகுதியில் நின்றதால் எனக்கு வேர்த்துக்கொட்டியது. இதனால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் அவர் என்னை அப்பகுதியிலிருந்து விரைவைாக அழைத்து செல்லும் நோக்கில் அப்படி செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sana Khan