பத்து தல இசை வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் பேசிய சிம்பு, ''நான் இங்க வரும்போது ஒரே விஷயம் தான் மனசுல ஓடிட்டு இருந்தது. நான் அழக்கூடாது. அது மட்டும் தான் நினச்சேன். படங்களில் சின்னதா சென்டிமென்ட் சீன் வந்தா கூட அழுதுருவேன். ஆனா உங்களுக்காக தான் அழக்கூடாதுனு நினைச்சேன். ஏனா நம்ம நிறைய கஷ்டங்களை பார்த்தோம். இனிமே சந்தோஷமா இருக்கணும்.
இந்தப் படம் ஆரம்பிச்ச கத ஒன்னு இருக்கு. இந்தப் படம் ஆரம்பிச்சப்போ கஷ்டமான சூழ்நிலையில் இருந்தேன். அப்போ ஞானவேல் ராஜா இவர் வீட்டுக்குள்ளேயே இருக்காரு. வெளிய வர மாட்ராரு அப்படினு சொன்னாரு. வீட்டுக்குள்ள இருக்கிறது ஒரு பிரச்னையா ? அப்றோம் கொஞ்ச நாள் கழிச்சு அவரே கால் பண்ணாரு. கன்னடத்துல ஒரு படம் இருக்கு மஃப்டினு. அத தமிழ்ல பண்ணனும்னு சொன்னாரு.
கன்னடத்துல சிவ ராஜ்குமார் பண்ணாரு. அவரு அங்க ஒரு சூப்பர் ஸ்டார். அவர் ரோல்ல நான் எப்படி நடிக்க முடியும்னு தயங்குனேன். ஆனா இந்தப் படம் ஒத்துக்கிட்டதுக்கு காரணம் கௌதம் தான். சின்ன படமா இருக்கட்டும், பெரிய படமா இருக்கட்டும் எனக்கு பிடிச்சிருந்தா அந்தப் படத்துல நடிச்சவங்கள கூப்பிட்டு பாராட்டுவேன். ஏனா இங்க தட்டி விடுறதுக்கு நிறைய பேரு இருக்காங்க. ஆனா தட்டி கொடுக்க யாரும் இல்ல.
எனக்கு தட்டிக்கொடுக்க என் ரசிகர்கள் மட்டும் தான் கூட இருக்காங்க. கௌதம் ஒரு நல்ல பையன். தங்கமான பையன். அந்த பையன் நிறைய பிரச்னைகளை சந்திச்சுட்டு இந்த இடத்துக்கு வந்திருக்காரு. எனக்கு இந்தப் படம் வெற்றிப்படமாக அமையுதா இல்லையோ, உங்களுக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையனும்.
என் காட்ஃபாதர் ரஹ்மான் சாருக்கு எத்தனை தடவை நன்றி சொல்றதுனே தெரியல. என் மேல அவருக்கு அப்படி என்ன அன்புனு எனக்கு தெரியல. ஒரு சிஷ்யனா அவருக்கு என் மேல இருக்கிற அன்பை காப்பாத்துவேன். ஆன்மிகம் வழியிலும் அவர் எனக்கு குருவா இருந்திருக்காரு.
முன்னாடி ஒரு எனர்ஜி இருக்கும். ஃபயரா பேசுவீங்க. இப்போ ரொம்ப சாஃப்டா பேசுறீங்கனு சொல்றாங்க. அதுக்கு ஒரு காரணம் இருக்கு. முன்னாடிலாம் வந்து காட்றன்டா. நான் யாருனு தெரியுமாடானு பேசியிருக்கேன். அப்போ ரொம்ப கஷ்டத்துல இருந்தேன். இனி இவர் சினிமாலயே இருக்கமாட்டாரு. இவர் கத முடிஞ்சு போச்சுனு சொன்னாங்க. அந்த நேரத்துல நான் தான் எனக்கு துணையா இருக்க முடியும். அதனால தாங்க. ஃபயரா பேசுறது, கத்தி பேசுறது எல்லாம். அந்த நேரத்துல என் ரசிகனை விட்டா யாருங்க என் கூட இருந்தா. 38 கிலோ இந்தப் படத்துல குறைச்சிருக்கேனா அதுக்கு இந்த ஒரு விஷயம் தான் காரணம்.
மாநாடு படத்தை கொண்டாடி, வெந்து தணிந்தது காடு படத்துல என் நடிப்பை பாராட்டி இந்த பத்து தலங்கிற இந்த ஸ்டேஜ்ல கொண்டுவந்து நிறுத்திருக்கீங்க. எப்படிங்க கத்தி பேச முடியும் பணிஞ்சு தான் பேச முடியும். இனி பெருசா பேசுறதுக்குலாம் ஒன்னும் இல்லைங்க செயல் மட்டும்தாங்க. ஒரு தடவ டிரான்ஸ்பர்மேஷன் பண்ணிட்டோம்னு விட்றாதீங்க. ஒவ்வொரு நாளும் நம்மள மாத்தி தான் ஆகணும். இனிமே நீங்க சந்தோஷமா இருங்க. மத்ததெல்லாம் நான் பாத்துக்கிறேன். இனிமே நான் என்ன பண்றேனு மட்டும் பாருங்க. சாதாரணமா வரல. வேற மாறி வந்திருக்கேன். இனிமே உங்கள தலை குணிய விடமாட்டேன்'' என்று பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AR Rahman, Gautham Karthik, Simbu