முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / செம ஸ்பீடு.. இன்னும் 2 மாசம்தான்... வேக வேகமாய் முடியும் லியோ ஷூட்டிங்!

செம ஸ்பீடு.. இன்னும் 2 மாசம்தான்... வேக வேகமாய் முடியும் லியோ ஷூட்டிங்!

விஜய்

விஜய்

சமீபத்தில் யூடியூபர் இர்ஃபான் காஷ்மீரில் லியோ படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்தார். அங்கே படக்குழுவினருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் காஷ்மீரில் நடைபெற்று வந்தது. இன்றுடன் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவுபெற்றது. இதனையடுத்து லியோ குறித்த தங்கள் அனுபவங்களை படக்குழுவினர் பகிரும் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் மழை உள்ளிட்ட எந்த சவாலான சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடைபெற்றுவருவதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பணியாற்றும் வேகத்தைப் பார்த்து தாங்களும் உத்வேகத்துடன் பணியாற்றுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். காஷ்மீரில் இந்த காலநிலையில் பணியாற்றுவது கடினம் எனவும் இந்த சூழ்நிலையை தமிழ் கலைஞர்கள் அதனை மிக எளிதாக கையாண்டதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். 31 நாட்களாக மழை, பனிப்பொழிவு என எதையும் பொருட்படுத்தாது படப்பிடிப்பு நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது காஷ்மீர் பட்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் அடுத்ததாக சிறிது இடைவேளைக்கு பிறகு ஏப்ரலில் சென்னை, ஹைதராபாத்தில் 2 மாதங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படத்துக்கு பிறகு அதிவேகமாக படப்பிடிப்பு பணிகள் முடிவடையும் படமாக லியோ இடம்பெற்றுள்ளது.

' isDesktop="true" id="917423" youtubeid="2GTgpcl5PXs" category="cinema">

சமீபத்தில் யூடியூபர் இர்ஃபான் காஷ்மீரில் லியோ படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்தார். அங்கே படக்குழுவினருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் படக்குழுவினர் பாதுகாப்பாக இருப்பதாகவும், தளபதி விஜய் உட்பட 200க்கும் மேற்பட்ட கலைஞர்களும் பணியாளர்களும் கடந்த 55 நாட்களாக இரவு பகல் பாராமல் உழைத்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Lokesh Kanagaraj