முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய்யின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா? - ஷோபா சந்திரசேகர் சொன்ன சீக்ரெட் - வைரலாகும் வீடியோ

விஜய்யின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா? - ஷோபா சந்திரசேகர் சொன்ன சீக்ரெட் - வைரலாகும் வீடியோ

விஜய் - ஷோபா சந்திரசேகர்

விஜய் - ஷோபா சந்திரசேகர்

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யின் ஃபிட்னஸ் குறித்து அவரது அம்மா ஷோபா சந்திரசேகர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் லியோ படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக விஜய் - அர்ஜுனுக்கு இடையேயான காட்சிகள் சென்னையில் தற்போது படமாக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த மாதம் நடிகர் விஜய் தனது அம்மா ஷோபா சந்திரசேகருடன் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலானது. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா ஆகியோரின் 50வது திருமண நாளை முன்னிட்டு இந்த போட்டோ எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தனது அப்பாவுடன் விஜய் எடுத்துக்கொண்ட போட்டோ வெளியாகாததால் இருவருக்கும் சண்டையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பத் துவங்கினர்.

இதையும் படிக்க | ''மைசூர் சிங்கம் அண்ணாமலை சிறப்பாக செயலாற்றினார்...'' - கர்நாடகாவில் பாஜக தோல்வி குறித்து நமீதா அதிரடி

இந்நிலையில் ஷோபா சந்திரசேகர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் திருமண நாள் குறித்து விஜய்க்கு போனில் தெரிவித்ததும் உடனடியாக வீட்டுக்கு வந்தாராம். வாட்ஸ் அப் டிபி வைக்க வேண்டும் என கேட்க, அப்போது எடுக்கப்பட்ட போட்டோ தான் அது என்று தெரிவித்தார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர் படப்பிடிப்பிற்காக வெளியூரில் இருந்ததால் அவருடன் போட்டோ எடுக்க முடியவில்லை என்றும் விளக்கமளித்தார்.

மேலும் அந்த பேட்டியில் நடிகர் விஜய்யின் ஃபிட்னஸ் குறித்து பேசியிருந்தார். அதில் நடிகர் விஜய் காலையில் இரண்டு தோசை, இரவு இரண்டு தோசை மட்டுமே சாப்பிடுவார் என்றும் தொடர்ந்து ஜிம்மில் உடற்பயிற்சி செய்வார் என்றும் இதுதான் அவரது ஃபிட்னஸ் ரகசியம் என்றும் தெரிவித்தார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay