முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video:'விஜயிடம் இதை நாங்க எதிர்பார்க்கல...' வாரிசு ஆடியோ லான்ஞ்ச் சர்ச்சை குறித்து மனம் திறந்த ஷோபா சந்திரசேகர்

Video:'விஜயிடம் இதை நாங்க எதிர்பார்க்கல...' வாரிசு ஆடியோ லான்ஞ்ச் சர்ச்சை குறித்து மனம் திறந்த ஷோபா சந்திரசேகர்

தளபதி விஜய் - ஷோபா சந்திரசேகர்

தளபதி விஜய் - ஷோபா சந்திரசேகர்

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடந்த சர்ச்சை குறித்து நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் விளக்கமளித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படம் பொங்கலை முன்னிட்டு வெளியான வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில் வெற்றிப் படமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சு பெரிதும் பக்கபலமாக அமைந்தது. ''1990களில் எனக்கு ஒரு நடிகர் போட்டியாக இருந்தார். பின்னாளில் என்னுடன் அவர் சீரியஸான போட்டியாளராக மாறினார். அந்த நடிகரின் வெற்றியால் நானும் தொடர்ந்து ஓடினேன்.

அந்த நடிகரை விட அதிக வெற்றிகளைப் பெற வேண்டும் என்று போராடினேன். நமக்கு அப்படிப்பட்ட போட்டியாளர் வேண்டும்'' என்று அவர் பேசிக்கொண்டிருக்க, ஒருவேளை நடிகர் அஜித்தைப் பற்றி சொல்கிறாரா என ரசிகர்கள் யூகிக்க தொடங்கினர். ஆனால், ''அந்த போட்டியாளர் ஜோசப் விஜய். உங்களுடன் போட்டிபோடுங்கள்'' என ரசிகர்களின் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதன் ஒரு பகுதியாக இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தனது அப்பா - அம்மாவை விஜய் கண்டுகொள்ளவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் இதுகுறித்து விளக்கமளித்தார். அவர் பேசியதாவது, நாங்கள் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விருந்தினர்களாக தான் கலந்துகொண்டோம். அங்கே ரசிகர்களை விஜய் திருப்திபடுத்த வேண்டும். அங்கே எங்களை கவனிக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. என்று பேசியிருந்தார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay