முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / உண்மை சம்பவம்.. பான் இந்தியா ஆக்‌ஷன் படம்.. பக்கா கெட்டப்பில் நடிகை ஷில்பா ஷெட்டி!

உண்மை சம்பவம்.. பான் இந்தியா ஆக்‌ஷன் படம்.. பக்கா கெட்டப்பில் நடிகை ஷில்பா ஷெட்டி!

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி

பான் - இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவதியாக பாலிவுட் பிரபல நடிகை  ஷில்பா ஷெட்டி   இணைந்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் துருவா சர்ஜாவின் நடிப்பில், பான் - இந்திய ஆக்சன் படமாக உருவாகும்   ‘கேடி-தி டெவில்’ படத்தின் அடுத்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள்  வெளியிட்டுள்ளனர். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா, இந்த திரைப்படத்தில் சத்யவதி எனும் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த அறிவிப்பு  ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1970களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு  ஆக்‌ஷன் என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது. இப்படத்தில் துருவா சர்ஜாவுடன், ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். இந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா கூறுகையில், “ராஜ்யங்களுக்கு இடையே நடக்கும் ஒரு மாபெரும் போரை பற்றிய கதை தான் கேடி தி டெவில், ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் ஒரு ‘சத்யவதி’ தேவை.  இந்த 'கேடி' போர்க்களத்தில் நானும் ஒரு அதிசக்தி வாய்ந்த கதாப்பாத்திரத்தில் சத்தியவதியாக நடிப்பது மகிழ்ச்சி என்றார்.

KVN Productions வழங்கும் KD-The Devil  'கேடி தி டெவில்'  படத்தை இயக்குநர் பிரேம் இயக்குகிறார். இந்த பான்-இந்தியா திரைப்படம், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published:

    Tags: Actress Shilpa Shetty