விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் கடந்த 12 ஆம் தேதி இராவண கோட்டம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்தப் படம் தொடர்பாக யூடியூப் பக்கம் ஒன்றுக்கு சாந்தனு பேட்டியளித்திருந்தார்.
அப்போது பேசிய அவர், . என்னை ஒரு வாரத்துக்கு முன் லோகேஷ், அவரோட வீட்டுக்கு நைட் டின்னருக்கு வா என கூப்பிட்டார். ரிலீஸ் பிரசர்ல என்னால போக முடியல. படம் ரிலீஸ் ஆகட்டும் வரேனு சொன்னேன். பின்னர் நான் 4 நாட்களுக்கு முன் லியோ படப்பிடிப்பு தளத்துக்கு விஜய் அண்ணாவை சந்திக்க சென்றிருந்தேன்.
அப்போ, விஜய்யிடம் லோகேஷ், அண்ணா ஓவரா பண்றான் இவன். வீட்டுக்கு கூப்பிட்டா வரமாட்றான் என்றார். அதற்கு விஜய், ஆமா நீ கூப்பிட்டு வச்சு பண்ண வேலைக்கு வீட்டுக்கு வேர வரணுமா என கேட்டார் என்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இதையும் படிக்க | என் முதன்மை கதாப்பாத்திரம் தீவிரவாதி அல்ல - ஃபர்ஹானா பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்
முன்னதாக மாஸ்டர் படத்தில் தனது காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து சாந்தனு வருத்தம் தெரிவித்தார். அவர் பேசியதாவது, ''நான் எதிர்பார்த்தது ஒன்னு நடந்தது ஒன்னு. எனக்கு 30 நாள் ஷுட்டிங் இருந்தது. ஆனால் படத்துல வந்தது 12 நிமிஷம். 12 நிமிஷம் வந்ததுக்கு ஏன் 30 நாள் நடிக்கனும்? எனக்கு தனி ஃபைட் சீன், பாட்டுலாம் இருந்தது. காலேஜ் ஃபைட் சீன்ல எனக்கு தனியா ஃபைட் ஷூட் பண்ணாங்க. எனக்கும் விஜய் அண்ணாவுக்கும் காம்பினேஷன் ஃபைட் சீன் இருந்தது.
சுவர் ஏறி குதிச்சு கௌரியை நான் காப்பாற்ற வரும்போது அங்கே ஒரு ஃபைட் நடக்குது. என்னை எல்லோரும் லாக் பண்றாங்க. அப்போ விஜய் என்ட்ரி கொடுத்து என்னைக் காப்பாத்துவார். அப்போ ரெண்டு பேரும் சைட் பை சைட் நின்னு ஃபைட் பண்றோம். அவரை ஒருத்தர் குத்தப் போகும்போது அவரை நான் காப்பாற்றுவேன். ஆனால் அது படத்துல அந்தக் காட்சிகள் வரல” என்று பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.