மதயானைக் கூட்டம் படத்துக்கு பிறகு இயக்குநர் விக்ரமன் சுகுமாரன் இயக்கியிருக்கும் படம் இராவணக் கோட்டம். இந்தப் படத்தில் சாந்தனு ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படம் தொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில் மாஸ்டர் படத்தில் தனது காட்சிகள் நீக்கப்பட்டதாக வேதனை தெரிவித்திருக்கிறார்.
அவரது பேட்டியில், மாஸ்டர் மாதிரி பெரிய ப்ராஜெக்ட் கிடைக்கும்போது கண்டெண்ட்ல எனக்கான ஸ்கோப் நிறையவே இருந்தது. கதையில் என்னோட கேரக்டரோட கிராஃப் நல்லா இருந்தது. அடுத்தது விஜய் அண்ணாவோட நடிக்கப்போறேன். யார் வேணாம்னு சொல்லுவா.
ஆனா படத்தில் வரப்போறதே இல்லைனு தெரிஞ்சிகிட்டதுக்கு அப்றோம், யூடியூப்ல யாராவது இன்டர்வியூ கொடுப்பாங்களா? யூடியூப்ல இண்டர்வியூ கொடுத்த ஃபுட்டேஜ் கூட படத்துல இல்லையேனு கலாய்ச்சாங்க. தளபதி விஜய்யின் மாஸ்டர் உலகத்துல இருக்கிற எல்லோரும் போய் பார்ப்பாங்க. 30 முதல் 40 நிமிடங்கள் ஸ்கிரீன்ல வரேனு சொன்னா எனக்கு பிளஸ்ஸா இருந்திருக்கும். நான் எங்கேயாவது போகும்போது 8, 10 வயசு பசங்க, டே மாஸ்டர் பார்கவ்டானு சொல்லுவாங்க.
விஜய்னா படத்துல நடிச்ச பிறகு வாழ்க்கை மாறும்னு நினைச்சேன் ஆனா படம் வெளியாகி அவமானம்தான் ஏற்பட்டுச்சி எனக்கு.. நல்ல கதாபாத்திரம்னு சொல்லி கூப்ட்டு அத சொல்லாமலே தூக்கிடாங்க இதனால் பல கேலிக்கு ஆளனேன்.
- நடிகர் சாந்தனு பாக்யராஜ் வேதனை..#Jailer #Ak62 #Lalsalaam #Rajinikanth pic.twitter.com/EAt70ZUPnU
— Spicy Chilli (@spicychilli4u) April 21, 2023
நான் எதிர்பார்த்தது ஒன்னு நடந்தது ஒன்னு. எனக்கு 30 நாள் ஷுட்டிங் இருந்தது. ஆனால் படத்துல வந்தது 12 நிமிஷம். 12 நிமிஷம் வந்ததுக்கு ஏன் 30 நாள் நடிக்கனும்? எனக்கு தனி ஃபைட் சீன், பாட்டுலாம் இருந்தது. காலேஜ் ஃபைட் சீன்ல எனக்கு தனியா ஃபைட் ஷூட் பண்ணாங்க. எனக்கும் விஜய் அண்ணாவுக்கும் காம்பினேஷன் ஃபைட் சீன் இருந்தது.
சுவர் ஏறி குதிச்சு கௌரியை நான் காப்பாற்ற வரும்போது அங்கே ஒரு ஃபைட் நடக்குது. என்னை எல்லோரும் லாக் பண்றாங்க. அப்போ விஜய் என்ட்ரி கொடுத்து என்னைக் காப்பாத்துவார். அப்போ ரெண்டு பேரும் சைட் பை சைட் நின்னு ஃபைட் பண்றோம். அவரை ஒருத்தர் குத்தப் போகும்போது அவரை நான் காப்பாற்றுவேன். ஆனால் அது படத்துல அந்தக் காட்சிகள் வரல” என்று பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Thalapathy Vijay