முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பதான் வெற்றியால் உற்சாகம்... ரூ.10 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய ஷாருக்கான்..!

பதான் வெற்றியால் உற்சாகம்... ரூ.10 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய ஷாருக்கான்..!

நடிகர் ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான்

Shah rukh khan car | ஷாருக்கான் சினிமா வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரையும் பதான் பெற்றுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் ஷாருக்கான் தற்போது ரூ.10 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரை வாங்கி இருக்கிறார். ஷாருக்கான் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியான பதான் படம் உலகம் முழுவதும் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. அடுத்தடுத்து தோல்வி படங்களை பார்த்து துவண்டு கிடந்த இந்தி பட உலகம் இந்த வெற்றியால் உற்சாகமாகி உள்ளது.

ஷாருக்கான் சினிமா வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரையும் பதான் பெற்றுள்ளது. இந்த படத்தில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் நீச்சல் உடை அணிந்து ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடினார். இதனால் படத்தை புறக்கணிக்கும்படி எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அதையும் மீறி வெற்றி பெற்றுள்ளது.

இதையும் படிங்க; கர்நாடக தேர்தல் பரப்புரை... பொதுமக்களை நோக்கி ரூ.500 நோட்டுகளை அள்ளி வீசிய டி.கே.சிவக்குமார்...!

top videos

    இதனால் மகிழ்ச்சியில் மிதந்த ஷாருக்கான் தற்போது ரூ.10 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரை வாங்கி இருக்கிறார். ஏற்கனவே ரூ.7 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸின் பேந்தம் மாடல் கார், ரூ.4 கோடி மதிப்பிலான பென்ட்லி. ரூ.14 கோடி மதிப்பிலான புகாட்டி வெய்ரான் கார்களும் ஷாருக்கானிடம் உள்ளன. உலகின் பெரிய பணக்கார நடிகராக ஷாருக்கான் மாறி இருக்கிறார். அவருக்கு ரூ.6 ஆயிரத்து 152 கோடிக்கு சொத்துகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.

    First published:

    Tags: Car, Shah rukh khan