ஐயா நான் உயிரோடு இருக்கிறேன் என்று வீடியோ வெளியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட குணசித்திர நடிகர். தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகியவை உட்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் கோட்டா சீனிவாசராவ். 1990-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து கோட்டா சீனிவாசராவ், 1999 - 2004 வரை ஆந்திரப் பிரதேச விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவர்.
அவர் திடீரென்று அகால மரணம் அடைந்து விட்டதாக இன்று ஹைதராபாத் உள்ளூர் சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவியது. இந்த தகவல் அவர் வசிக்கும் வீடு இருக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தையும் அடைந்தது. புகழ்பெற்ற நடிகர், முன்னாள் ஆந்திரா சட்டமன்ற உறுப்பினர் இறந்துவிட்டார் என்பதால் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த முக்கிய பிரமுகர்கள், ரசிகர்கள் ஆகியோர் ஏராளமான எண்ணிக்கை வருவார்கள் என்று கருதிய போலீஸ் அதிகாரிகள் 10 காவலர்களை வேன் ஒன்றில் அவருடைய வீடு இருக்கும் பகுதிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற போலீசார் கோட்டா சீனிவாசராவ் வீட்டின் கதவை தட்டினர். அப்போது அவரே வீட்டில் இருந்து வெளியில் வந்து என்ன என்று கேட்டதாக தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ஒன்றும் சொல்ல இயலாத நிலையில் குழம்பி தவித்தனர். தங்களை சமாளித்து கொண்டு நடந்த சம்பவம் பற்றி போலீசார் அவரிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மேலும் பலர் அவருடைய மகனை செல்போனில் தொடர்பு கொண்டு என்ன நடந்தது, எப்படி இறந்தார்? எப்போது இறுதி சடங்கு செய்யப் போகிறீர்கள் என்று விசாரித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கோட்டா சீனிவாச ராவ், ஐயா நான் சாகவில்லை. உயிரோடு இருக்கிறேன் .உங்கள் அனைவருக்கும் உகாதி வாழ்த்துக்கள் என்று கூறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor, Tamil Cinema