முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ’உன் ஆவேசம் தாயின் அடிவயிற்றுக் குரல்..'' - பிரியங்கா காந்திக்கு ஆதரவாக பதிவிட்ட இயக்குநர் சீனு ராமசாமி

’உன் ஆவேசம் தாயின் அடிவயிற்றுக் குரல்..'' - பிரியங்கா காந்திக்கு ஆதரவாக பதிவிட்ட இயக்குநர் சீனு ராமசாமி

பிரியங்கா காந்தி - ராகுல் காந்தி - சீனு ராமசாமி

பிரியங்கா காந்தி - ராகுல் காந்தி - சீனு ராமசாமி

தகுதி நீக்கத்திற்காக தான் அஞ்சப்போவதில்லை என்று தெரிவித்த ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் கண்ணில் பயம் தெரிவதாகவும் குற்றம்சாட்டினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இது ஜனநாயகப் படுகொலை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தகுதி நீக்கத்திற்காக தான் அஞ்சப்போவதில்லை என்று தெரிவித்த ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் கண்ணில் பயம் தெரிவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி, எங்கள் குடும்பத்தை வாரிசு அரசியல் என்று சொல்லும் நரேந்திர மோடி அவர்களே, இந்த நாட்டின் ஜனநாயகம் எங்கள் குடும்பத்தின் ரத்தத்தால் எழுதப்பட்டது. எங்கள் நரம்புகளில் ஓடும் இந்த இரத்தத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. உங்களைப் போன்ற கோழைகளின் முன் அடி பணியாது என்று பேசியிருந்தார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் சீனு ராமசாமி, ''தங்கை பிரியங்கா காந்தி பிரியங்கள் யாவும் உனக்கு தந்தேன் பூங்கொத்தாக....

எப்போதும்

அமைதி

பொய்மையை கண்டுபிடிக்க உதவாத தெரு நாய்.

புனர்ஜென்ம மோப்பசக்தி அதற்கில்லை.

உன் ஆவேசம் தாயின் அடிவயிற்றுக் குரல்.

வாழ்த்துகள் சகோதரி..

அண்ணன்,

படைப்பாளி

சீனு ராமசாமி என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Priyanka Gandhi, Rahul Gandhi, Seenu ramasamy