முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''வெற்றிமாறன் மனித வடிவில் இருக்கும் மிருகம்'' - சீமான் பரபரப்பு பேச்சு

''வெற்றிமாறன் மனித வடிவில் இருக்கும் மிருகம்'' - சீமான் பரபரப்பு பேச்சு

சூரி - வெற்றிமாறன் - சீமான்

சூரி - வெற்றிமாறன் - சீமான்

விடுதலை படம் குறித்து பேசிய சீமான், இயக்குநர் வெற்றிமாறன் மனித வடிவில் இருக்கும் மிருகம் என்று தெரிவித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களைச் சந்திந்து பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 2013ல் ஆட்டோ மீட்டர் கட்டணம் சீரமைப்பு நடைபெற்றது. அதே மீட்டர் கட்டணத்திற்கு இன்று ஆட்டோ ஓட்டுநர்கள் எப்படி ஆட்டோ ஓட்ட முடியும். ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று பிழைக்க வழியில்லை. வட இந்தியர்களை ஆதரித்து பேசுபவர்கள் எங்கள் ஆட்களையும் ஐயோ பாவம் என்று சொல்லுங்கள்" என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர்,  " லிட்டருக்கு 103 ரூபாய் டீசல் பெட்ரோல் ஏறிய பிறகு அதே கட்டணத்திற்கு எங்களால் ஆட்டோ ஓட்ட முடியாது. டாஸ்மாக்கை மட்டுமே முழுமையாக நம்பி இருக்கும் இந்த அரசு சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களை அரசே நடத்தினால், முறைப்படுத்தினால் வருவாயும் பெருகும் நாட்டின் வளமும் பெருகும். 24 மணி நேரம் டாக்ஸி ஓட்டுவதை 8 மணி நேரமாக முறைப்படுத்த வேண்டும். நாம் தமிழர் கட்சியில் அதிகாரமிருந்தால் ஒரு நொடியில் அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்து விடுவோம்.

தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் கொடுப்பது இருக்கட்டும் முதலில் சுங்கக் கட்டணத்தை நிறுத்த சொல்லுங்கள். வரி கட்டி எங்களால் வாழமுடியவில்லை. வேலைவாய்ப்பில் 80 சதவீதம் தமிழருக்கு கொடுங்கள் 20% யாருக்கு வேண்டுமானாலும் கொடுங்கள்.

நிலம் வளம் என்னுடையதாக இருந்தாலும் வேலைவாய்ப்பு என்னுடையதாக இல்லை. இதை பேசினால் என்னை பாசிஸ்ட் என்கிறார்கள்,ஆம் நான் பாசிஸ்ட்தான். உரிமைக்கு பேசினால் பாஸிஸ்ட் என்றால் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டி இருக்கிறது.

top videos

    ஆகச்சிறந்த படைப்பாளிகள் தமிழ் சினிமாவில் இருந்துவருகிறார்கள். பாலசந்தர், மகேந்திரன், பாரதிராஜா எனப் பலரும் வந்துள்ளனர். அப்படியான படைப்பாளிகள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் வெற்றிமாறன், ராம் உள்ளிட்டோர் சிறந்த படங்களை தந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதனை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ‘விடுதலை’ போன்ற படத்தை எடுப்பதற்கு கடும் உழைப்பை கொட்ட வேண்டியிருக்கிறது. காட்டுக்குள் பயணிச்சு மலையில் ஏறி கடுமையான உழைப்பை வெற்றிமாறன் கொடுத்துள்ளார். அவர் மனித வடிவில் இருக்கும் மிருகம். அந்த வெறியில் அவர் படம் எடுக்கிறார். அது பாராட்டத்தக்கது. என்று பேசினார்.

    First published:

    Tags: Director vetrimaran, Seeman