முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / “ஒரே ஒரு வாட்டி பாக்கணும்” விஜய் வீட்டு வாசலில் கண்ணீர் மல்க காத்து நின்ற பள்ளி மாணவி!

“ஒரே ஒரு வாட்டி பாக்கணும்” விஜய் வீட்டு வாசலில் கண்ணீர் மல்க காத்து நின்ற பள்ளி மாணவி!

விஜய் ரசிகை

விஜய் ரசிகை

காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார்குளத்தை சேர்ந்த பானிபூரி வியாபாரியின் மகளான இவர், ஈசிஆர்க்கு சுற்றுலா வந்த நிலையில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

நடிகர் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்று அவரது வீட்டின் முன்னால் பள்ளி மாணவி ஒருவர் கண்ணீர் மல்க காத்து நின்ற வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்க்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. அத்தகைய ரசிகர்களில் பலருக்கு விஜய்யை நேரில் பார்க்கவேண்டும் என்பது பெரும் கனவு.

அப்படித்தான் தமிழ்ச்செல்வி என்ற 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் விஜய்யை பார்க்க வேண்டும் என அவரது வீட்டுக்கே நேராக சென்றார். ஆனால் வீடு பூட்டியிருந்ததால் தனது கோரிக்கையை விஜய் வீட்டு சிசிடிவி கேமரா முன்னால் கண்ணீர் மல்க கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார்குளத்தை சேர்ந்த பானிபூரி வியாபாரியின் மகளான இவர், ஈசிஆர்க்கு சுற்றுலா வந்த நிலையில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழ்ச்செல்வி மட்டுமல்லாது அவரது குடும்பமே விஜய் ரசிகர்கள்தான் என சொல்லப்படும் நிலையில் இந்த வீடியோவுக்கு விஜய்யின் ரியாக்சன் என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

top videos
    First published:

    Tags: Actor Vijay, Trending Video, Viral Video