முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சாலை விபத்தில் பிரபல டிவி நடிகை மரணம்... வருங்கால கணவருடன் டூர் சென்றபோது விபரீதம்

சாலை விபத்தில் பிரபல டிவி நடிகை மரணம்... வருங்கால கணவருடன் டூர் சென்றபோது விபரீதம்

வைபவி உபாத்யா

வைபவி உபாத்யா

வருங்கால கணவருடன் டூர் சென்றபோது விபத்துக்குளானதில் டிவி நடிகை சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியில் சாராபாய் Vs சாராபாய் என்ற சின்னத்திரை தொடர் மூலம் பிரபலமானவர் வைபவி உபத்யா. தீபிகா படுகோனுடன் இணைந்து 'சப்பக்' என்ற படத்திலும் சமீபத்தில வெளியான 'டிமிர்' என்ற படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.

இவர் கடந்த திங்கட் கிழமை தனது வருங்கால கணவருடன் இமாச்சல பிரதேசத்தில் உள்ள குலு மணாலிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் பயணித்த கார் மலைப்பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையும் படிக்க |  அமராவதியில் தொடங்கிய திரைப்பயணம்... சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்யும் ‘தல’ அஜித்!

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த வைபவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். வைபவியுடன் காரில் சென்ற அவரது வருங்கால கணவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Accident, TV actress