முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி - வெளியான சூப்பர் கூல் அப்டேட்!

சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி - வெளியான சூப்பர் கூல் அப்டேட்!

வடக்குப்பட்டி ராமசாமி படத்திலிருந்து சந்தானம் - மேகா ஆகாஷ்

வடக்குப்பட்டி ராமசாமி படத்திலிருந்து சந்தானம் - மேகா ஆகாஷ்

சந்தானம் நடிக்கும் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சந்தானம் நடிக்கும் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

சந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றி அடைந்த திரைப்படம் டிக்கிலோனா. இந்த திரைப்படத்தை கார்த்திக் யோகி  இயக்கியிருந்தார்.  டிக்கிலோனா திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து சந்தானம் மற்றும் இயக்குனர் கார்த்திக் யோகி மீண்டும் வடக்குபட்டி ராமசாமி படத்துக்காக இணைந்தனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பு துவங்கியது.

டிக்கிலோனாவைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் கவுண்டமணியின் பிரபல காமெடியை நியாபகப்படுத்தும் விதமாக  குறிப்பாக வடக்குப்பட்டி ராமசாமி என்ற வார்த்தையைத் தலைப்பாக வைத்து படப்பிடிப்பைத் தொடங்கினர்.  நகைச்சுவையும் மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இடைவெளி இல்லாமல் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் 63 நாட்களில் வடக்குப்பட்டி இராமசாமி படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்துள்ளனர்.  இதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.  இந்த திரைப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

top videos

    மேலும்  ஜான் விஜய், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்குப்பட்டி ராமசாமி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரெடக்க்ஷன் வேலைகளை தொடங்கியுள்ளனர்.

    First published:

    Tags: Actor Santhanam