தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய். அவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் வெளியானது. இதை அடுத்து மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது.
இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்திற்காக History of Violence படத்தின் உரிமையை முறையாக கைப்பற்றி அதில் சில மாற்றங்களை செய்து திரைக்கதை எழுத்தியுள்ளார் லோகேஷ் கனகராஜ். மேலும் தன்னுடைய முந்தைய படங்களின் தொடர்பான Lokesh Cinematic Universe கனெக்ஷனையும் தொடர்புப் படுத்தியுள்ளார்.
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முன்னதாக சஞ்சய் தத் இந்த திரைப்படத்தை பற்றி கூறியதாவது, தளபதி 67 படத்தின் ஒருவரி கதையை கேட்டவுடன், இந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என நினைத்ததாகவும், இந்த திரைப்படத்தின் பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்திருந்தார்.
நடிகர் சஞ்சய் தத் 'லியோ' படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துள்ளார். இதனை புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ள படக்குழு பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
Thank you @duttsanjay sir, you’ve been such a sweet & down to earth person.Our entire team enjoyed seeing your performance so close by, you rocked as usual sir.
Eagerly waiting to see you back on the sets in the Chennai schedule.
Meendum sandhippom sir❤️
- With Luv,Team #LEO pic.twitter.com/4bPn09c9Ea
— Seven Screen Studio (@7screenstudio) March 17, 2023
அதில், "நன்றி சஞ்சய் தத் சார், நீங்கள் மிகவும் இனிமையாக இருந்தீர்கள். எங்கள் படக்குழுவினர் உங்கள் நடிப்பை அருகில் பார்த்து மகிழ்ந்தார்கள். எப்போதும் போல் நீங்கள் சிறப்பாக நடித்தீர்கள். உங்களை சென்னை படப்பிடிப்பில் சந்திக்க நாங்கள் காத்திருக்கிறோம். மீண்டும் சந்திப்போம் சார்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay, Lokesh Kanagaraj, Sanjay Dutt