முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அதுக்குள்ள கிளம்பிட்டாரா ? தளபதி விஜய்யின் லியோ படத்திலிருந்து வெளியான அப்டேட்

அதுக்குள்ள கிளம்பிட்டாரா ? தளபதி விஜய்யின் லியோ படத்திலிருந்து வெளியான அப்டேட்

விஜய் - லோகேஷ்

விஜய் - லோகேஷ்

உங்கள் நடிப்பை அருகில் இருந்து பார்த்து மகிழ்ந்தோம். எப்பொழுதும் நீங்கள் சிறப்பாக செய்தீர்கள். சென்னை படப்பிடிப்பில் நீங்கள் இணைவதை எதிர்நோக்கி நாங்கள் காத்திருக்கிறோம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துவரும் படம் லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்தப் படத்தின் அப்டேட்டுகளை அவ்வப்போது வழங்கி ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வம் குறையாமல் தயாரிப்பு தரப்பினர் பார்த்து கொள்கின்றனர். அந்த வகையில் சஞ்சய் தத் சமீபத்தில் படப்பிடிப்பில் இணைந்தார். இதனை தயாரிப்பு நிறுவனத்தினர் வீடியோவாக வெளியிட்டிருந்தனர்.

வீடியோவில் சஞ்சய் தத்தை விஜய், லோகேஷ் கனகராஜ், மனோஜ் பரமஹம்சா உள்ளிட்டோர் அவரை கட்டியணைத்து வரவேற்றனர். இந்த லாங் ஹேர், சால்ட் அண்ட் பெப்பர் என முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் விஜய் இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

காஷ்மீர் ஷெட்யூலில் தனது பணிகளை முடித்துக்கொண்டு சஞ்சய் விடைபெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நன்றி சஞ்சய் தத் சார், நீங்கள் இனிமையான மற்றும் தன்னடக்கமான மனிதர். உங்கள் நடிப்பை அருகில் இருந்து பார்த்து மகிழ்ந்தோம். எப்பொழுதும் நீங்கள் சிறப்பாக செய்தீர்கள். சென்னை படப்பிடிப்பில் நீங்கள் இணைவதை எதிர்நோக்கி நாங்கள் காத்திருக்கிறோம். - அன்புடன் லியோ படக்குழு என குறிப்பிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Lokesh Kanagaraj, Thalapathy vijay