மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்த பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. அந்தப் படத்தில் மலர் டீச்சராக பெரிதாக மேக்கப் எதுவும் இல்லாமல் இயல்பாக தோன்றி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார் சாய் பல்லவி. தமிழிலும் அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சென்னையில் மட்டும் 100 நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
ஏற்கனவே கஸ்தூரி மான், தாம் தூம் உள்ளிட்ட சிறிய வேடங்களில் நடித்துள்ள சாய் பல்லவி, பிரேமம் படத்துக்கு பிறகு மீண்டும் தமிழில் தியா, மாரி 2, என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்தார். மிகச்சிறந்த நடனக்கலைஞரான சாய் பல்லவி மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரௌடி பேபி பாடலுக்கு தனுஷுடன் இணைந்து டான்ஸில் தெறிக்க விட்டார் என்றே சொல்ல வேண்டும். இதனால் யூடியூபில் இந்தப் பாடல் இந்திய அளவில் கோடிக்கணக்கான வியூஸ்களை அள்ளியது.
View this post on Instagram
இதையும் படிக்க | VIDEO: 'ஜெய் பீம்' மணிகண்டனா இது ? கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் எப்படி இருக்காரு பாருங்க!
அதற்கு நேர்மாறாக கடந்த வருடம் வெளியான கார்கி படத்தில் மிடில் கிளாஸ் பெண்ணாக யதார்த்தமாக நடித்து விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றார். நடிக்க வருவதற்கு முன் சாய் பல்லவி நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் சாய் பல்லவியின் நடனத்தைப் பார்த்த சமந்தா அவரை வெகுவாக பாராட்டினார். இந்த வீடியோவில் பேசிய சமந்தா, நீங்க டான்ஸ் ஆடும்போது கண்களை உங்கள் மீது இருந்து அகற்ற முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress sai pallavi, Samantha