ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி ஆஸ்கர் விருது வென்றார். இசையமைப்பாளர் கீரவாணி தமிழில் மரகதமணி என்ற பெயரில் அழகன், வானமே எல்லை, ஸ்டுடண்ட் நம்பர் 1 உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும் சந்திரமுகி 2 படத்துக்கு இசையமைத்துவருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நாட்டு நாட்டு பாடலை அனிருத் இசையில் தனுஷ் எழுதி பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடலுடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். ஒய் திஸ் கொலவெறி பாடல் போல் நாட்டு நாட்டு பாடல் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டதற்கு காரணம் அந்தப் பாடலின் அழகான, தனித்துவமான பாடல் வரிகள் தான். பாடலாசிரியர் சந்திரபோஸின் வரிகளும் நடன இயக்குநரின் சிறப்பான நடனும் பாடல் இந்த அளவுக்கு வைரலானதற்கு காரணம்.
இந்தப் படத்தின் முக்கிய இரண்டு வரிகள் ஃபன்னாகவும் அதே நேரம் ரைமிங்காகவும் இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பாடல்வரிகளுக்கு கிடைத்துவரும் பாராட்டுக்களுக்கு சந்திரபோஸ் முற்றிலும் தகுதியானவர் என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டு நாட்டு பாடலை தமிழில் மதன் கார்கி நாட்டு கூத்து என்ற பெயரில் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்ஆர்ஆர் படத்தின் ஆஸ்கர் பரப்புரைக்கு ரூ.80 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக சர்ச்சை உருவானது. இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் டிவிவி தன்யா, ஆஸ்கர் விருது பரப்புரைக்கு எந்த செலவு செய்யவில்லை எனவும் ராஜமௌலி மற்றும் படக்குழுவினருடன் தொடர்பில் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா அளித்த பேட்டி ஒன்றில், ஆஸ்கர் விருதை பணம் கொடுத்து வாங்கியதாக சொல்லப்படுவது பொய். அப்படி வாங்க முடியாது. இது அனைவருக்கும் தெரியும். என்று குறிப்பிட்டிருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.