முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் நாயகி யார்? பரிசீலனையில் இருக்கும் 5 நடிகைகள்!

அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் நாயகி யார்? பரிசீலனையில் இருக்கும் 5 நடிகைகள்!

அஜித்குமார்

அஜித்குமார்

அஜித்தின் 62-வது படத்தின் நாயகி யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வரும் நிலையில் 5 நடிகைகள் பரிசீலனையில் இருப்பதாக தற்போது கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

துணிவு படத்தை தொடர்ந்து லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தன்னுடைய 62வது படத்தில் அஜித் நடிக்க திட்டமிட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் லைகா நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்டது. ஏகே62 என்ற தற்காலிக தலைப்புடன் முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வந்தன. அத்துடன் அந்தப் படத்தின் திரையரங்கு வெளியீட்டுக்கு பிந்தைய ஓ.டி.டி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு 75 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது லைகா. இதை அந்த நிறுவனம் பொங்கல் அன்று வெளியிட்டது.

ஏகே 62 படத்திற்கு நடிகர்கள் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடைபெற்று வந்தாலும் படத்திற்கான கதைக்கு விக்னேஷ் சிவன் முழு வடிவம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அஜித் வழக்கமாக முழு கதையையும் எப்போதும் கேட்கமாட்டார் என்ற தகவல் உள்ளது. இதை துணிவு படத்தின் இயக்குநர் எச்.வினோத் , தன்னுடைய நேர்காணல்களில் உறுதிபடுத்தியிருந்தார். ஆனால் லைகா நிறுவனத்தினர் விக்னேஷ் சிவனிடம் முழு கதையையும் கேட்டு வந்ததாகவும், ஆனால் அவர் தயார் செய்து கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Also read... துவளும் நேரங்களில் தோள் தரும் மாயக் குரல்.. பாடகர் பிரதீப் குமாருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

அதன் காரணமாக தற்போது தடையறத் தாக்க, தடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்க ஒப்பந்தமானார். அதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 62-வது படத்துக்கு  ‘விடாமுயற்சி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார் என்றும், அனிருத் இசையமைக்கிறார் என்றும் லைகா நிறுவனம் டைட்டில் போஸ்டரை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்தது. படப்பிடிப்பை இந்த மாதம் இறுதியில் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

இன்னொரு புறம் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு சத்தமில்லாமல் நடந்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது. அஜித்துக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஐஸ்வர்யா ராய், திரிஷா, கங்கனா ரணாவத், கத்ரினா கைப், கரீனா கபூர் ஆகிய 5 நடிகைகள் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Ajith