தமிழின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் அப்பா பி.சுப்பிரமணியம் கடந்த 24 ஆம் தேதி அதிகாலை 3.15 மணியளவில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில் ஈ.சி.ஆர் சாலையில் உள்ள நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஏற்கனவே இந்த நிகழ்வை குடும்ப நிகழ்வாக நடத்த திட்டமிட்டுள்ளதாக அஜித் மற்றும் அவரது சகோதரர்கள் தெரிவித்திருந்திருந்தார். இதன் காரணமாக துக்கம் விசாரிக்க வரும் பிரபலங்கள் சந்தித்துக்கொண்ட படங்கள் வெளியாக வேண்டாம் என பார்த்துக்கொண்டார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் நடிகர் விஜய் தரப்பிலும் அஜித்தை சந்திக்கவிருப்பதை பப்ளிசிட்டியாக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அஜித், விஜய் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை. இதனால் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கிடைக்காமலேயே இருந்தது. முன்னதாக மங்காத்தா - வேலாயுதம் படப்பிடிப்புகள் ஒரே இடத்தில் நடந்தபோது படக்குழுவினருடன் இருவரும் சந்தித்துக்கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.