முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வாரிசு, துணிவு படங்களால் வந்த சோதனை... 3 நாட்கள் மூடப்பட்ட தியேட்டர்கள்... ரசிகர்கள் சோகம்..!

வாரிசு, துணிவு படங்களால் வந்த சோதனை... 3 நாட்கள் மூடப்பட்ட தியேட்டர்கள்... ரசிகர்கள் சோகம்..!

சேலம் ஆத்தூரில் மூடப்பட்ட திரையரங்கம்

சேலம் ஆத்தூரில் மூடப்பட்ட திரையரங்கம்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் 5 திரையரங்குகள் மூடப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரப் பகுதியில் கடந்த ஜனவரி மாதம்  11 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு , நடிகர் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய இரண்டு படங்களும் அதிகாலை 4.00.மணிக்கு ரசிகர்களுக்காக சிறப்பு காட்சிகள்  திரையிட்டப்பட்டது.

இதனையடுத்து சிறப்பு காட்சிகள் திரையிடபட்டதற்கு  சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆத்தூரில் உள்ள விஸ்வநாத், என்.எஸ், பத்மாலாயா, பிரியாலாயா, கேசவன் ஆகிய திரையரங்க உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டார். இதுகுறித்து திரையரங்க உரிமையாளர்கள் முறையாக விளக்கம் அளிக்காததால் திரையரங்குகளை மூன்று நாட்களுக்கு மூட மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம்  உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிக்க |  Video: மனோபாலா மறைவு... நடிகர் விஜய் நேரில் அஞ்சலி... மகன் கையைப் பிடித்து ஆறுதல்..!

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 , ருத்ரன் ஆகிய திரைப்படங்கள் 5 திரையரங்குகளிலும் திரையிடப்பட்டிருந்தது. வழக்கம் போல காலை காட்சிக்கு 10:00 மணிக்கு ரசிகர்களுக்கு டிக்கெட் கொடுத்து திரையரங்கில் அனுமதிக்கப்பட்டனர். ஆத்தூர் வட்டாட்சியர் மாணிக்கம் தலைமையிலான வருவாய் துறையினர் திரையரங்கிற்க்கு வந்து உடனடியாக படத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டு திரையரங்கில் இருந்த ரசிகர்களை வெளியேற்றினர்.

படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியே சென்றனர். ஆத்தூரில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டதால் ரசிகர்களுக்கு இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Salem, Theatre